முதுமுனைவர்.இறையன்பு அவர்கள், 7-2-21 தேதியிட்ட ராணி வார இதழில் ,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில்.

முதுமுனைவர்.இறையன்பு அவர்கள், 7-2-21 தேதியிட்ட ராணி வார இதழில் ,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில். பயிர்களுக்குப் பணிவிடை செய்யாமல் கதிர்களை அறுவடை செய்ய முடியாது. ** சிலரைப் பச்சோந்தி என அழைக்கிறார்களே...? ஒப்பீடு தவறு. பச்சோந்தி இடத்திற்கு ஏற்ப நிறம் மாறும்; மனிதர்கள் நேரத்திற்கேற்ப நிறம் மாறுவார்கள். பச்சோந்தி நிறம் மாறுவது இயல்புக்கூறு; மனிதர்கள் நிறம் மாறுவது பண்புக்கூறு. *** நம்மை யாராவது 'முட்டாள்' என்று சொன்னால் அவமானப்படுகிறோமே, எப்படித் தவிர்ப்பது? கவலைப்படாதீர்கள். உலகம் இதுவரை கண்ட அத்தனை அறிவாளிகளுமே முட்டாள்களால் முட்டாள் என்று முன்மொழியப்பட்டு மூடர் பட்டம் கட்டப்பட்டவர்கள்தாம்.

கருத்துகள்