முனைவர்.இறையன்பு அவர்கள், ---7-2-21 தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில்.

முனைவர்.இறையன்பு அவர்கள், ---7-2-21 தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,'மனத்தில் தோன்றிய வினாக்கள்!'எனும் தலைப்பில். பற்றாக்குறை பற்றிய உங்கள் கருத்து...? பற்றாக்குறையிலும் பலனிருக்கிறது. அகல் விளக்கில் படித்தபோது இருந்த கவனம், ஆயிரம் மின்னாற்றல் விளக்கில் படிக்கும்போது வாய்ப்பதில்லை. ** பேச்சு, எழுத்து எது ஆற்றல் வாய்ந்தது? பேச்சு வாழையைப்போல விரைவில் பலனளிப்பது. எழுத்து தென்னையைப்போல நீடித்துநின்று பலனளிக்கும் தன்மையுடையது.மங்கல நிகழ்வுகளுக்கு வாழைப்பழமும்,தேங்காயும் இடம்பெறுவதுபோல சமூக மாற்றத்திற்கு இரண்டும் பயனளிக்கின்றன. *** முகத்துக்கு எது அலங்காரம்? கருணை கண்களுக்கும்,புன்னகை இதழ்களுக்கும்,கவனித்தல் காதுகளுக்கும் அலங்காரமாக அமைகின்றன. **** சுயமோகம் தவறா? சுயத்தை நேசிப்பதில் தவறில்லை. சுயத்தை நேசிப்பது உணவில் இருக்கும் உப்பைப்போல கச்சிதமாகவும், அளவோடும் இருக்க வேண்டும்.அது அடுத்தவர்களுக்குத் தெரியுமளவு தூக்கலாக இருக்கும்போது சுயமோகமாகி மற்றவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. ---

கருத்துகள்