ஆய்வாளர் அ.இராஜராஜேஸ்வரி, தன் முனைவர் பட்டத்திற்கான "இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை" எனும் ஆய்வேட்டில் (திசம்பர்-2019) தெரிவித்த முடிவுரை:--

ஆய்வாளர் அ.இராஜராஜேஸ்வரி, தன் முனைவர் பட்டத்திற்கான "இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை" எனும் ஆய்வேட்டில் (திசம்பர்-2019) தெரிவித்த முடிவுரை:-- * வெ.இறையன்பு இலக்கியம், பேச்சுக்கலை, நிர்வாகம் எனத் தான் ஈடுபடும் துறைகளில் திறம்படப் பணிகளை மேற்கொள்பவர். * பூமாலை, சமத்துவபுரம், உழவர் சந்தை எனப் பல்வேறு திட்டங்களுக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர். * இவரது காலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் ஒரு பொற்காலம் என்று கூறுமளவிற்குச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். * அவருடைய ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நிர்வாகத்தைப் பொறுத்தவரை 'பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டார். * தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளை அறிந்தவர்.தொலைக்காட்சிகளில் தொடர்ந்து உரை நிகழ்த்தி வந்தார். இவரது பயனுள்ள ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் விற்பனைக்கு உள்ளன.

கருத்துகள்