ஆய்வாளர் அ.இராஜராஜேஸ்வரி,தன் முனைவர் பட்டத்திற்கான "இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை"எனும் ஆய்வேட்டில் (திசம்பர்-2019)தெரிவித்த முடிவுரையில்,முதுமுனைவர்.இறையன்பு ஐயாவைப்பற்றிய சிறப்புக் குறிப்புகள்:-

ஆய்வாளர் அ.இராஜராஜேஸ்வரி,தன் முனைவர் பட்டத்திற்கான "இறையன்பு படைப்புகளில் மொழியாளுமை"எனும் ஆய்வேட்டில் (திசம்பர்-2019)தெரிவித்த முடிவுரையில்,முதுமுனைவர்.இறையன்பு ஐயாவைப்பற்றிய சிறப்புக் குறிப்புகள்:-- * இறையன்புவின் சொல்லாட்சியில் புராணக்கூறு, யதார்த்தம், அறிவுறுத்தும் பண்பு, கற்பனையைத் தூண்டும் கவிநயச் சொற்கள் எனப் பல சிறப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. * இறையன்புவின் படைப்புகள் இத்தகைய சிறந்த அமைப்புகளுடன் மொழியாளுமை பெற்று கம்பீரமாக இலக்கிய உலகில் வலம் வருகின்றன. * இறையன்புவின் சொல்லாட்சியில் தாவரவியல் சொற்கள் தவழ்கின்றன.புத்தர், விவேகானந்தர், குருநானக் போன்ற ஆன்மீகவாதிகள் கூறிய கருத்துக்கள் மலிந்திருக்கின்றன. மேலும் அறிஞர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறி மக்கள் தோல்வி அடைந்து துயறுற்று இருந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் பயணத்தைத் தொடர வழிவகுக்கிறார். * மேலாய்வுகள் (1).இறையன்பு படைப்புகளில் முற்போக்குச் சிந்தனைகள் (2).இறையன்பு படைப்புகளில் பன்முகப் பார்வை (3).இறையன்பு படைப்புகளில் அறச்சிந்தனைகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ள இடம் உள்ளது. ******************************************

கருத்துகள்