படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவ

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.* பல்வேறு உலகநாடுகளின் பெண்கள் பற்றிய அற்புதமான வார்த்தைகள் .* ❤ ♥1) சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்தான். –மகாத்மா காந்தி. ♥2) இறைவனின் படைப்புகள் எல்லாவற்றையும் விட அழகிலும், மேன்மையிலும் சிறந்தவள் பெண்தான். –மில்டன். ♥3) பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் ஏல்லாவற்றிலும் விளக்கு. –ஜேம்ஸ்எல்லீஸ் ♥4) அவதூறு என்பது நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் மாய்ந்து பலமிழந்து விடுகிறது. –ஹீஸ். ♥5)பெண்ணின மடியில் இறையன்பு வளர்கிறது. –இக்பால். ♥6)பெண் இல்லாத வீடு மதிப்பில்லாதது. –யாரோ. ♥7)காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம். –ஷேக்ஸ்பியர். ♥8)எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப் படுகிறார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் குடியேறும். –மாகாபாரதம். ♥9)பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு. –லெனின். ♥10)ஒரு பெண்ணை படிக்க வைப்பது, ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு சமம். –சார்லஸ் டிக்கன்ஸ். ♥11)பொய்மை, கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும்வெறுப்பவை. –ஷேக்ஸ்பியர். ♥12)நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும் போது, தன்னையே தியாகமாக்கிக் கொள்ள விழைவதுதான் பெண்மை ! அது அவர்களுடன் பிறந்த இயல்பு. –வில்லியம் சாமர்சப்.

கருத்துகள்