திருமங்கலம் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம் !
திருமங்கலம் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியகம்,குடியரசு தினத்தை முன்னிட்டு 27-1-21அன்று மாலை 3.30மணி அளவில் நடத்திய பரிசளிப்பு விழாவில் படிப்பது சுகமே,எது கல்வி ஆகிய நூல்களின் பல்வேறு தலைப்புகளை பின்பற்றிய பேச்சுப்போட்டி,எழுத்துப்போட்டியில் வெற்றி பெற்ற அல்அமீன் மேல்நிலைப்பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு ஆகிய 20 மாணவர்களுக்கு முனைவர்.இறையன்பு அவர்களின் பல்வேறு நூல்களை பரிசாக வழங்கப்பட்டது.மேலும் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி,பாறைப் பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் குருசாமி ஞானவள்ளி அறக்கட்டளை நூலகத்திற்கும் தலா 50 நூல்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக