7-1-21 தேதியிட்ட (இந்த வார)குடும்பப் பத்திரிகையில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் ! "என்ற தலைப்பில், முதுமுனைவர்.இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும்


 

17-1-21 தேதியிட்ட (இந்த வார)குடும்பப் பத்திரிகையில்
" மனத்தில் தோன்றிய வினாக்கள் ! "என்ற தலைப்பில், முதுமுனைவர்.இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும்

இதோ:-(3).ஞானிகள் ஏன் இமயம் சென்று தவம் இருக்கிறார்கள் ?
         அங்குதான் கைப்பேசி கோபுரம் இல்லை. எனவே,அடிக்கடி கைப்பேசி அழைப்பு வந்து அவர்கள் தியானம் கலையாது.
(4). கற்பு என்பது என்ன?
கணவனும் மனைவியும் அனைத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதும்,ஒருவரை மற்றொருவர் அப்படியே    ஏற்றுக்கொள்வதும்.
(6)சமூகம் என்றால் என்ன?
சமூகம் என்பது மாயை.மாறிக்கொண்டே இருப்பது.நாம் வாழும் இடமே நம் சமூகமாக மாறுகிறது.சமூகத்தைத் திருப்திப்படுத்தவே முடியாது.அது ஒருமித்த மனத்துடன் ஒருபோதும் இருப்பதில்லை.

(7).விழிகள் உண்மையில் பேசுமா ?
விழிகள் பேசினால் அன்பு.வீணை பேசினால் இசை.வியர்வை பேசினால் உழைப்பு.விதைகள் பேசினால் வயல்.விழிகள்...வெளியே வாழ்கிற இதயம்.சொற்கள் போலியாக இருப்பதை விழிகளே காட்டிக்கொடுத்து காபந்து செய்கின்றன.
(8). விழிப்புணர்வு என்றால் என்ன?
எந்த நேரத்தில் எந்தப் புலன் தூக்கலாகச் செயல்பட வேண்டும் எனத் தீர்மானித்துத் தேர்ந்தெடுத்து நடப்பதே விழிப்புணர்வின் சாரம்.
(9).வலிமையில் சிறந்தது உடல் பலமா,மனபலமா?
உடல் என்னும் குதிரையின் கடிவாளம்,மனம் என்னும் தேரோட்டியின் கைகளில் !



கருத்துகள்