முனைவர்.இறையன்பு அவர்கள்,      -----24-1-21தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,மனத்தில் தோன்றிய வினாக்கள்! எனும் தலைப்பில்.

முனைவர்.இறையன்பு அவர்கள்,      -----24-1-21தேதியிட்ட ராணி குடும்பப் பத்திரிகையில்,மனத்தில் தோன்றிய வினாக்கள்! எனும் தலைப்பில். ********************************************* * நேர்மை எப்படியிருக்க வேண்டும் ?             நேர்மை என்பது பண்பாக இருக்க வேண்டுமே தவிர வியாதியாகிவிடக் கூடாது. பண்பாடு இருப்பவர்கள் நேர்மையை அங்கியாகக் கருதுகிறார்களே தவிர ஆபரணமாகக் காட்டிக்கொள்வதில்லை. பண்பாக இருப்பவர்களுக்கு அது உள்ளாடையைப்போல; நம்முடைய திருப்திக்காக அதைத் தூய்மையாக அணிகிறோமே தவிர அடுத்தவர்களிடம் பறைசாற்றுவதற்கல்ல!                     நேர்மை,வியாதியாகும்போது மற்றவர்கள் எல்லோரும் திருடர்களாகத் தெரிவார்கள்.நாம் மட்டுமே நேர்மையாக இருப்பதாகத் தெரியும்.எப்போதும் நேர்மையைப் பற்றியே பேசுவார்கள்.தாங்கள் நேர்மையாக இருப்பதால் படும் துயரங்களைத் தொண தொணப்பார்கள்.நேர்மையால் இழந்தவற்றைப் பட்டியல் போட்டுச் சுயபரிதாபம் கொள்வார்கள்.      ---- --

கருத்துகள்