மண்ணும் மக்களும்* _வெ.இறையன்பு_ இந்நூலில் நேசத்த வரிகள்... ஞா.சந்திரன் கருத்துப் பூங்கா Karuthu Poonga-YouTube channel 9488008365
மண்ணும் மக்களும்*
_வெ.இறையன்பு_
இந்நூலில் நேசத்த வரிகள்...
ஞா.சந்திரன்
கருத்துப் பூங்கா
Karuthu Poonga-YouTube channel
9488008365
*சிலருக்கு வீடு வெறும் வீடு; சிலருக்கோ வாழும் முறையில் அது வீடுபேறு!*
_செங்கல்களால் ஆன கட்டடங்களை இதயங்கள்தாமே இல்லங்களாக்குகின்றன._
*எதிரிகளாய் இருக்கும் பிராணிகள்கூட ஒன்றாய் வளர்ந்தால் ஒட்டக்கொள்ளும்;நெருக்கமாய் இருக்கும் மனிதர்கள் இருவர் அதிகம் ஒன்றாய் இருந்தால் வெட்டிக்கொள்வர்!*
_விதையிடப்படாத வனங்களும் எழுதப்படாத மனங்களும் எண்ணற்ற ஆற்றலைத்தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன._
*கொடுத்துப்பழகிய கைகளுக்கு கொடுக்க ஏதும் இல்லாமல் போகும்போது ஏற்படும் வலி மரணத்திலும் கொடுமையானது!*
_நாம் நாற்றாக இருக்கிறபோது நம்மை நேசிக்கிற மனிதர்களைத்தான் மரமாக ஆனபிறகு கிளைகளில் ஊஞ்சலாடுகிறவர்களைவிட அதிகம் நேசிக்கிறோம்.நம்மை நமக்காகவே நேசித்தவர்கள் அவர்கள்._
...இதுபோன்ற இதயம் தொடும் கவித்துவமான சிந்தனைகள் பரவிக்கிடக்கின்றன. வாசிச்சு நேசியுங்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக