படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
~அன்புடன் ஆனந்தி
மிச்சிகன், வட அமெரிக்கா
காலம் கடக்கும் முன்
கால்தடம் பதித்திடு
பதித்த தடத்தினில்
பாதையும் வகுத்திடு
வகுத்த பாதையில்
வாழ்வினைத் தேடிடு..
தடங்கள் பாதையாய்
தன்னம்பிக்கை ஆயுதமாய்
சுவடுகள் சொல்லாத
சொற்குறிப்பு துணையாய்
வேளை தாண்டும் முன்
வென்றிடு நிலையாய்
நிதர்சனம் இதுவென்றே
கொண்டிடு துணையாய்..!
கருத்துகள்
கருத்துரையிடுக