படித்து நெகிழ்ந்தது ! கவிஞர் இரா .இரவி !
திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி ஐரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது.
திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷகுணம் என்ன வென்றால், மனதிற்படும் உண்மையை ஒழிக்காமல் சொல்லும் ஒர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய் தெரியும். அவரும் நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மை அற்றவர்கள் சிலர் புகுந்த பின், நானும் அவரும் விலகி விட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து , இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ் இயக்கத்து க்கு செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும் " !
- அய்யா பெரியார் பற்றி , வ.உ .சிதம்பரனார் .
கருத்துகள்
கருத்துரையிடுக