முதுமுனைவர்.வெ. இறையன்பு அவர்கள்,
"தெரிந்ததும் தெரியாததும்" எனும் நூலில்.
(1)மினுக்கினால் பலர் விழுந்து விடுவார்கள் என்கிற உண்மையை மின்மினிகளும் உணர்ந்திருக்கின்றன.
(2)மலர்கள் மீது மனிதன் கொண்டிருந்த மையலே அவனை அவற்றை வழிபாட்டிற்குப் பயன்படுத்தத் தூண்டியது.
(3).அளவுக்கு மீறி இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவது அறிவுடைமையாகாது.
(4).இயற்கையை வளைக்கலாம்; ஒடிக்க நினைத்தால் ஆபத்து நிகழும்.
(5).செயற்கை குறுகிய பலன்களைத் தந்து நிரந்தர இழப்பை ஏற்படுத்திவிடுகிறது.
(6).மனிதனுக்கு வண்ணங்களைப்பற்றிக் கற்றுத் தந்ததே மலர்கள்தாம்.
(7).மலர்கள் மட்டுமே மனிதனுடன் வாழ்நாள் முழுவதும் உடன் வருகின்றன.
(8).வாசனையில்லாமல் எந்த மலரும் இல்லை. அவற்றின் அடர்த்தியே வேறுபடுகிறது.
(9).வாசனையில்லாத மலரும்,யோசனையில்லாத மனிதனும் நேசிக்கப் படுவதில்லை என்று சொல்லப்படுவதுண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக