படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
இரணங்கள் ! அன்புடன் ஆனந்தி !
நினைவில் ஆடிடும்
நீங்காத தருணங்கள்
வாதங்களில் தோற்கலாம்
வாழ்க்கையில் அல்ல..
உரசிடும் உண்மைகள்
உணர்ந்திடும் வேளையில்
காலம் கடந்திருக்கலாம்
காற்றும் நகர்ந்திருக்கலாம்
பேசிய பொழுதுகள்
பேசா மௌனங்கள்
நேசித்த கணங்கள்
நெஞ்சின் இரணங்கள்
உள்ளதைச் சொல்லிடும்
உயிர்வரைத் தீண்டிடும்
வெள்ளமாய்த் தாக்கிடும்
வெகுளியாய்ப் பார்த்திடும்
உத்தரவுக்கு காத்திராத
உவகையின் உச்சமது
சத்தமின்றிச் சொல்லிடும்
சத்தியம் இதுவென்றே..!
~
கருத்துகள்
கருத்துரையிடுக