படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இன்றைய சிந்தனை*

 படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !


இன்றைய சிந்தனை*

🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️🌨️

    *‘’உன்னையே நீ அறிவாய்"*

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

_*‘வேப்பமர உச்சியில் நின்னு, பேயொன்னு ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க. உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க, வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே.'*_  என்று சிறுவர்களை சீர்திருத்த,  பிரபல கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பொன்வரிகள்தான் இவை.

இந்த வரிகள் வெறும் மனப் பேயைக் கண்டு பயம் கொள்ளாதே என்று பொருள் இல்லை, எதையும் உடனே நம்பி விடாதே. 'அறிவை பயன்படுத்த வேண்டும்' என்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு கருத்தை யாராது உங்களிடம் கூறினால், ஏன் இப்படி நடக்கிறது, இதனால் யாருக்கு லாபம் என்பதை பகுத்து ஆராய வேண்டும்.

பெரியவர்கள் சொல் பேச்சைக் கேட்பது அவசியம்தான். ஆனால்!, அது அறிவுக்கும் அறிவியலுக்கும் சரியானதா என்று சிந்திக்க வேண்டும். கலாச்சாரம் மிகுந்த நமது தேசத்தில் புரளிகளுக்கும் கட்டுக் கதைகளுக்கும் பஞ்சமே இல்லை.

அதில் ஒரு சில நல்லவை இருந்தாலும், அறிவையும் அறிவியலையும் முடக்கும் பல தீமைகள் உள்ளன. அதை உடைக்க முதலில் பாடப் புத்தகங்களை தாண்டிய ஒரு கண்ணோட்டம் நமக்கு இருக்க வேண்டும்.

அந்த கண்ணோட்டம் பெற, முதலில் அது தொடர்பாக படிக்க வேண்டும். தற்போது 75 விழுக்காடு மாணவர்கள் கையில் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) கிடைத்துவிட்டது.

அது ஆட்டங்கள் விளையாடவும், காணொளிகளைக் காணவும்தான் நாம் பயன்படுத்திகிறோம். அது எப்படி உங்கள் அறிவைத் தீட்டும்.

இணையம் என்ற ஆயுதத்தால் பல புரளிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பல அறிவியல் முன்னேற்றம் கண்டுவிட்டோம். நல்லதை தேடி படித்தால் மட்டுமே புரளியில் இருந்து தப்பிக்கும் பகுத்தறிவை பெற முடியும்.

பகுத்தறிவு என்பது புரளியை உடைக்க மட்டுமான ஆயுதமில்லை. அது அறிவியலை வளர்க்கும் ஆயுதம். அதை பெற்றால் மட்டுமே வளமான அறிவியலையும், சமூதாயத்தையும் நாம் உருவாக்க முடியும். அதை நீங்கள்தான் செய்ய முடியும்.

_ஆம் ._

_நண்பர்களே...!*_

🟡 _'உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பி விடாதே? ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்..! என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு  விட்டுச்சென்ற மாபெரும் சொத்து._

🔴 _நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா..? என்ன என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம்._

⚫ _நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்...? எதற்கு...? என்ற கேள்வியைக் கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன!, இந்த உலகமே உங்களுக்கு வசப்படும்._கருத்துகள்