படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! விழியோரம் கதை பேசி ! ~அன்புடன் ஆனந்தி மிச்சிகன், வட அமெரிக்கா
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
விழியோரம் கதை பேசி !
~அன்புடன் ஆனந்தி
மிச்சிகன், வட அமெரிக்கா
உயிர் மீட்டும் வல்லவனே
கதை சொல்லி உறவாடி
காதல் பேசும் என்னவனே..
மொழி சொல்லாக் கதை நூறு
உன் விழி பேசும் நாயகனே
உணர்வுக்குள் உனை ஏற்றி
உறைந்திடுமே என் ஜீவனுமே..
தமிழூட்டித் தாலாட்டும்
தாய்க்கு இணையானவனே
தாகங்கள் மோகங்கள்
தாண்டியுமே உயிர் தீண்டிடுமே..
நிறையென்ற ஒன்றை உன்
குறையில்லா அன்பில் கண்டே
வரைமுறை இல்லா வாஞ்சையும்
வாசமொடு படர்ந்திடுதே..!
கருத்துகள்
கருத்துரையிடுக