முதுமுனைவர். இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் விருந்தோம்பல் ' என்ற நூலில். முதல் பதிப்பு:அக்டோபர்-2020. வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்,044-24314347.
முதுமுனைவர். இறையன்பு அவர்கள்,
இலக்கியத்தில் விருந்தோம்பல் ' என்ற நூலில்.
முதல் பதிப்பு:அக்டோபர்-2020.
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்,044-24314347.
1. எல்லாப் பண்பாடுகளிலும் விருந்தோம்பல் இருந்தாலும் தமிழ் இனத்தில் அதற்குத் தனிச் சிறப்பு உண்டு.
2. 'விருந்து'என்றால் 'புதுமை'என்று பெயர்.
'ஓம்புதல்' என்றால் 'போற்றுதல்' என்று பொருள்.
3. 'வீட்டிற்கு வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளிப்பது உயரிய பண்பு' என்கிறார் தொல்காப்பியர்.
4.பழங்காலத்தில் தமிழகத்தில் அன்ன சத்திரங்கள் இருந்தன.
5. 'ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு 'ஹாஸ்பிட்டாலிடி' என்று பெயர்.
6.இந்தியாவில் விருந்தினரை 'அதிதி' என்று அழைப்பது உண்டு. அதிதி என்றால் 'தேதி சொல்லாமல் வரும் உரிமை பெற்றவர்'என்று பொருள்.
7. 'அதிதி தேவோ பவ' என்றால் வருகிற விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர் என்ற பொருள் உண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக