மதங்களை அடியார்கள் தோற்றுவிக்கவில்லை. நாம் தான் அவற்றைத் தோற்றுவித்தோம். நம் முகத்திலிருக்கும் கோணலுக்காக நாம் கண்ணாடிகளைப்போட்டு உடைக்கிறோம்.
ஆன்மிகம் என்பது சாரத்தை உறிஞ்சிக்கொண்டு சக்கையை எறிந்துவிடுகின்ற சமாச்சாரம். எதையும் எப்போதும் வருத்தமின்றித் துறக்கத் தயாராகும் மனப்பக்குவமே ஆன்மிகம்.
* மதவாதிகள்"எல்லாம் மாயை" என்று சொல்லி அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்; ஆன்மிகவாதிகள் எல்லாம் நிஜம் என்று பயந்து அவற்றை உதிர்க்கத் தயாராகிறார்கள்.
*கரையை அடைந்ததும் தோணியைத் தோள்களில் தூக்கி அலைய வேண்டியதில்லை.மதம் என்கிற மொட்டு ஆன்மிகமாக மலர அன்புதான் தென்றலாக முடியும்.
-டாக்டர்.வெ.இறையன்பு
-ஓடும் நதியின் ஓசை(இரண்டாம் பாகம்)நூலிலிருந்து,எது ஆன்மிகம்?எனும் தலைப்பில்
கருத்துகள்
கருத்துரையிடுக