முதுமுனைவர். வெ.இறையன்பு ஐயா அவர்கள் எழுதிய தற்போது வெளியிட்டு வந்த ,இறைமையின் விடைகளாகவே உள்ள "இனிய இறையன்பு..."எனும் நூலில் சில...

முதுமுனைவர். வெ.இறையன்பு ஐயா அவர்கள் எழுதிய தற்போது வெளியிட்டு வந்த ,இறைமையின் விடைகளாகவே உள்ள "இனிய இறையன்பு..."எனும் நூலில் சில...

1.சினிமா மனதில் பதிவதுபோல் பாடம் பதிவதில்லையே ஏன் ?

திரைப்படத்தைபோல பாடங்களையும் காட்சிப்படுத்திப் படித்தால் கட்டாயம் பதியும்

2.பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பதை நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

இரவு பகல் ஏற்படுவதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். 

3.கனவு காண்பதுண்டா?

தூங்கும்போது மட்டுமே. 

4.தானியங்களில் தங்களுக்குப் பிடித்தது ?

மக்காச்சோளம். அதிகச் சிரமமின்றி அனைத்து இடங்களிலும் பயிரிட முடிவதால். 

5.துன்பத்திலும் இன்பம் தரும் விஷயம் எது?

துன்பவியல் காவியங்கள, நாடகங்கள்.  

கருத்துகள்