உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !






 உதிராப்பூக்கள் !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !



நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !


நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70.



*****


      அய்யா அவர்களின் 23-வது நூல் இந்த உதிராப்பூக்கள். அய்யா அவர்களின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைகூ கவிதைகளில் தேர்ந்தெடுத்து தொகுத்து எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்கள் வழங்கி உள்ளார். நூலுக்கு கூடுதல் தலைமை செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்களும், ஹைகூ தளத்தில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் மு. முருகேஸ் மற்றும் எழுத்தாளர் ஆத்மார்த்தி அவருகளும் அணிந்துரை வழங்கியுள்ளனர்.


ஜென் பௌத்தம் ஹைகூ கவிதைகளின் பிறப்பிடம் எனலாம். ஜென் குருக்கள் தமது ஆன்மிகத்தின் கணநேர அனுபவங்களைச் சிக்கெனப் சிக்கெனப் பதிவு செய்ய வடிவத்துக் கொண்ட வடிவமே ஹைகூ கவிதை வடிவம். ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார்.


ஐ+கூ = ஹைகூ         ஐ-கடுகு.       கூ-உலகம்


கடுகு போல சிறிய கவிதை வடிவில் உலகளாவிய கருத்துக்களைச் செறிவுடன் செறிந்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவே ஐக்கூ.


 மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப உருவாகிய வடிவே ஹைகூ..


இனி நூலுக்குள் செல்வோம். நூலின் பெரும்பாலான கவிதைகள் இயற்கை சார்ந்து உள்ளன. சில கவிகள் சமூக அவலங்களை சாடுகின்றன.


இயற்கை குறித்து நூல்.


“பறக்காமல் நில்

பிடிக்க ஆசை

பட்டாம் பூச்சி!”


“மாட்டியது யாரோ?

இத்தனை வளையல்கள்

கரும்புக்கு!”


இன்று மனிதநேயம் குறைந்துவிட்டதென நூல்


‘உலகெல்லாம் உறவு

பக்கத்துவீடு பகை

மனிதன்!’


‘அடிக்குமாடி நெருக்க

வீடுகளில் தூரம்

மனங்கள்!’


அரசியல் குறித்து நுhல்:


‘சண்டை பூனைகளை

ஏமாற்றிய குரங்கு

அரசியல்!”


“ஆட்டைகாட்டி

வேங்கையை பிடி

அரசியல்!”


வறுமை குறித்து நூல்


“சோலை வரையும்

ஓவியன் வாழ்வு

பாலை!”


“புத்தாடை நெய்தும்

நெசவாளி வாழ்க்கை

கந்தல்!”


இன்றைய கல்வி நிலை குறித்து நூல்


“பறவை கூண்டில்

      புள்ளிமான் வலையில்

      மழை பள்ளியில்!”


      “பணத்தை கொட்டு

            மூட்டை தூக்கு

            பெருங்கொண்ட பள்ளிகள்!”


சமூக அவலமாக  நூல்


      “உழவன் வாழ்வுக்கு

      வைத்தது உலகமயம்

      உலை!”


வாழ்வின் முன்னேற்றம் குறித்து நூல்


“ஈடுபாடு

      முரண்பாடு

      மேம்பாடு!”


பல்வேறு கருத்துகளை கொண்ட இனிய நூல் உதிராப்பூக்கள்!


*****


 

கருத்துகள்