கவிஞர் இரா. இரவி
இரா. இரவி என்றால் ஹைக்கூ, ஹைக்கூ என்றால் இரா. இரவி. ஹைக்கூவை எழுதிக்கொண்டே இருப்பவர். பொருள் ஒன்று என்றாலும் அதில் பல எழுதிடுவார். எழுதியவற்றை எப்படியாவது, எவ்வழியிலாவது வெளிக்கொணர்ந்திடுவார். நெஞ்சத்தில் ஹைக்கூ, இதயத்தில் ஹைக்கூ, ஹைக்கூ உலா, விழிகளில் ஹைக்கூ, ஹைக்கூ முதற்றே உலகு, உள்ளத்தில் ஹைக்கூ, ஹைக்கூ கவிதைகள், சுட்டும் விழி ஆகியவை அவரின் ஹைக்கூ தொகுப்புகள். மேற்படி தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை அடங்கிய தொகுப்பு ஆயிரம் ஹைக்கூ. இந்த ஆயிரம் ஹைக்கூக்களை இந்தியில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் முனைவர் மரிய தெரசா. மொழி பெயர்த்துத் காதல் கவிதைகளின் தொகுப்பு ' என்னவள்'. கவிதை அல்ல விதை, கவிதைச் சாரல், கவியமுதம், கவிச்சுவை ஆகியவை கவிதைத் தொகுப்புகள். படைப்பாளராக மட்டுமின்றி விமரிசகராகவும் பயணித்து வருகிறார். ஹைக்கூ ஆற்றுப் படை என்பது ஹைக்கூத் தொகுப்புகள் மீதான விமரிசனம் அடங்கிய தொகுப்பு. கவிதைகள் மீதான விமரிசனங்கள் கொண்ட நூல் புத்தகம் போற்றுதும். இரவியின் ஹைக்கூக்களிலிருந்து ஒரு நூறைத் தேர்ந்தெடுத்து ' உதிராப் பூக்கள்' என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பைத் தந்துள்ளார் கவிஞர் ஆத்மார்த்தி. தொடர்ந்து தொகுப்புகளைத் தந்து கொண்டே இருக்கிறார். இன்று அவரின் பிறந்த நாள். அவர் கவிதைப்பயணம் தொடர வாழ்த்துகள்.
பொன். குமார்
9003344742
கருத்துகள்
கருத்துரையிடுக