ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
போதனைகள் காற்றில்
பிரமாண்ட சிலைகள்
வருத்தத்தில் புத்தர் !
வரவில்லை ஞானம்
போதிமரத்தால்
புத்தருக்கு !
வீணடித்தது
திறனையும் நேரத்தையும்
திறன்பேசி !
நன்மை தீமை
இரண்டும் உண்டு
திறன்பேசி !
பணக்காரர் அணிந்தால்
நவீனம்
சாயம் போன ஆடை !
கடித்தது கால்களை
பணம் தந்து வாங்கியும்
புதிய காலணி !
குறை கணவனிடம்
பட்டம் மனைவிக்கு
மலடி !
மன்னியுங்கள்
தவறு செய்தாலும்
மன நோயாளிகளை !
வருந்தினான் உழவன்
அட்சதை என்ற பெயரில்
வீணானது அரிசிகள் !
பார்க்க வெற்றிடம்
உள்ளே உள்ளது
காற்று !
கூடுதலும் குறைதான்
ஆறு விரல்காரர்
மாற்றுத் திறனாளி !
வல்லரசாவது இருக்கட்டும்
முதலில் ஒழியுங்கள்
கொசுக்களை !
சோம்பேறிகள் விருப்பம்
முள் இல்லாத
மீன் !
கருத்துகள்
கருத்துரையிடுக