முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் !
காவல் உதவி ஆணையர் .மதுரை .
--------------------------------
கவிஞர் இரா.இரவி மதுரை அரசு சுற்றுலாத் துறையின் மாவட்டத் துணை அலுவலர்.
பணி நேரம் போக மீதி நேரம் அனைத்தையும் தமிழுக்கு அணி சேர்ப்பவர்.
எனது 30 ஆண்டு கால நண்பர்.
தமிழ், தமிழ்மண்ணுக்கும் தூயத் தொண்டாற்றும் பெருந்தகை.
கொண்டக் கொள்கையில் ஒரு நூலிழைக் கூடத் தளராதவர்.
ஆடம்பரமில்லாமல் ,அமைதியாய், தம்பட்டம் அடிக்காமல் தமிழ் வளர்ப்பவர்.
தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் அனைவருடன் நட்பாய் உள்ளவர்.
எனக்கு பல இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்திய தகவல் பெட்டகம்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று முழங்கும் பாவேந்தரின் வாரிசு.
எனது கனவுத் தமிழ் உலகத்து தமிழ் வளர்ச்சித் துறை .
இளைய கவிஞர்கள், தமிழ் மொழி ஆர்வலர்கள் இவரது நாகரீகமான நடவடிக்கைகளை இவரிடமிருந்து பயின்று தமிழ்மொழியைக் காக்க வேண்டும்.
இவரது புதுக் கவிதைகள் குறும்பா என்ற ஹைகூ கவிதைகள் புனைவதில் வல்லவர் 22 நூல்கள் வெளியிட்டுள்ளார்.
இவர் இயற்றிய ஆயிரம் ஹைகூ என்ற கவிதை நூலினை முனைவர் மரிய தெரசா அவர்கள் இந்தி மொழியில் மொழி பெயர்த்து இவருடையப் புகழுக்கு மேலும் மணிமகுடம் சேர்த்துள்ளார்.
புகழ்பெற்ற கவிஞர் ஆத்மார்த்தி இவரது 100 சிறந்த கவிதைகளை உதிராப் பூக்கள் என்றப் பெயரில் தொகுத்துள்ளார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் இரு நூல்களையும் வெளியிட்டுள்ளது மேலும் சிறப்பு.
இருநூல்களையும் இன்று 31.10.20 .ஆம் தேதி வழங்கி மகிழ்ந்தார்.
பிறமொழி மக்களுக்கு நம் தமிழ்க் கவிஞரின் திறமை கொண்டு செல்லபட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்க ஒன்று.
இந்த முயற்சிக்கு கவிஞரைப் பாராட்ட வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.
எழுதும் அனைத்து நூலினையும் எனக்கு உடனடியாகப் பரிசளித்து மகிழ்வார்.
நான் கலந்து கொள்ளும் புதுக் கவிதைப் பற்றிய அனைத்துக் கூட்டங்களிலும் இவரது கவிதைகளை மேற்கோள்காட்டிப் பேசி கைத்தட்டல்கள் பெறுவேன்.
அனைவரும் கவிஞரின் நூல்களை வாங்கி படித்து அவரது தமிழ்ப்பணியினைப் பாராட்ட மீண்டும் கோருகின்றேன்.
------------------------------------------------------------------------------------------
கண்ணியம் மிக்க காவல் துறையின் பெருமைகளில் ஒன்றானவர் .அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்களின் அன்பிற்கும் உடன் மனம் திறந்து பாராட்டிய உயர்ந்த உள்ளத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா . கவிஞர் இரா .இரவி .
கருத்துகள்
கருத்துரையிடுக