நெஞ்சு பொறுக்கவில்லை ! கவிஞர் இரா .இரவி !
சங்கம் வைத்து தமிழும், மரமும் வளர்த்த மதுரையில் அறிவார்ந்த நகரம் ( SMART CITY ) என்ற பெயரில் அறிவற்ற செயல் செய்து வருகின்றனர் .பழம்பெரும் மரங்களை நான்கு மாசி வீதிகளிலும் வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .வடக்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் இருந்த மரம் இது . மேல மாசி வீதி அய்யப்பன் கோயில் அருகில் இருந்த பெரிய மரத்தையும் வெட்டி விட்டனர் .வடக்கு மாசி வீதி இராமாயணச் சாவடி முன் இருந்த பெரிய மரத்தையும் வெட்டி விட்டனர் .இனியும் மரம் வெட்டுவதை நிறுத்த வேண்டும் .வேரோடு எடுத்து சென்று வேறு இடத்தில வைக்க வேண்டும் .
கருத்துகள்
கருத்துரையிடுக