பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! மிரட்டல் ! கவிஞர் இரா .இரவி !

 



பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !


மிரட்டல்  ! கவிஞர் இரா .இரவி !

பயந்தது போல பம்மி
பாய்வார்கள் பின்பு
மிரட்டல்  !

காரியம் சாதிக்க
கருவி அல்ல
மிரட்டல்  !

அன்பால்  ஆளலாம்
வாம்பால்வீழலாம்
மிரட்டல்  !
  
பயன்படுத்தியவர் மீதே
பாய்ந்து பயப்படுத்தும்
மிரட்டல்  ! 

எதற்கும்
தீர்வல்ல
மிரட்டல்  ! 

மிரட்டியவர்களே
மிரண்டுபோனார்கள்
நாடு நடப்பு !

ஈடுபடுவதில்லை
சுயமரியாதைக்காரனிடம்
மிரட்டல்  ! 

அதிகாரம் வைத்திருப்போரின்  
ஆணவ ஆயுதம்
மிரட்டல்  ! 

இன்று பிறரை
நாளை உன்னை
மிரட்டல்  ! 

அடிபணிவதில்லை
அனைவரும்
மிரட்டல்  ! 

கோழையிடம் ஈடுபடும்
வீரனிடம் எடுபடாது
மிரட்டல்  ! 

மனசாட்சியற்றவரின்
மனிதநேயமற்ற செயல்
மிரட்டல்  ! 

இல்லாத பேய்களை
இருப்பதாக திரைப்படங்களில்
மிரட்டல்  ! 

சிலர் பயன்படுத்துவது
பலர் விரும்பாதது
மிரட்டல்  ! 

ஏற்கமாட்டான்
கொள்கையாளன்
மிரட்டல்  ! 
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://tamil.pratilipi.com/search?q=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%20.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF

கருத்துகள்