ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !

 

ஹைக்கூ!  கவிஞர் இரா. இரவி !


 எறும்பு ஊற கல் தேயும்

முயற்சி செய்திட

முடியாதது முடியும்


கற்பிக்கின்றன

தமிங்கிலம்

திரைப்பாடல்கள்!


மழை வரப்போவதை

அறிகின்றன அஃறிணைகள்

மனிதன்?


ஊர் வாயை மூட முடியாது

வேண்டாம் கவலை

நட உன் மனசாட்சிப்படி!


மாற்றுத்திறனாளி இருக்கை

மற்றவர்கள் பயணம்

மாற்றுத்திறனாளி வந்து நின்றும் 


உழவனுக்கும் வைத்தனர் ஆப்பு

மசோதாக்கள்

என்ற பெயரில்!


மென்று

மெதுவாக உண்டால்

நீளும் ஆயுள்!


அன்று பொதுவுடைமையானது

இன்று தனியுடைமையானது

காலத்தின் கோலம்!


உடலுக்குத் தான் வயதாகும்

உள்ளத்திற்கு வயதாகாது

என்றும் இளமை!


மகிழ்ச்சியாக இல்லை மக்கள்

உணருங்கள்

ஆள்வோரே!


குட்டி போடவில்லை

மயிலிறகு

ஏமாற்றத்தில் குழந்தை!


கொரோனாவை விட

கொடுமையானது

கொரோனா காலச் சட்டங்கள்!


வேண்டாம் பொன்னாடை

வேண்டும் பயனாடை

கவிஞர் வேண்டுகோள்


வட்டி குறைப்பு அறிவிப்பு 

வங்கிக்குச் சென்றால்

அதற்கொரு கட்டணம்!


வாங்கி கடனை

நினைவூட்டி கவலை தந்தது

கடன் அட்டை!


வேண்டாம் கூச்சம்

தட்டுங்கள் கையை

ஆயுள் கூடும்!


கூப்பிட்டுக் கொடுப்பார்கள்

கூப்பிட்டு வதைப்பார்கள்

வாங்காதீர் கடன்!


வரவேற்புரை சிறப்புரையானதால்

சிறப்புரையோ

வரவேற்புரையான30hது!

கருத்துகள்