ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

 




ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


தள்ளிப்போகிறது
ஏழைகளின் திருமணம்
தங்கம் விலை ஏற்றம் !

வைக்கோல் கன்று நம்பும்
ஏமாளி மாடாக
சில மனிதர்கள் !

அவ்வை சொன்னதை
அறியவில்லை பலர்
அறம் செய்ய விரும்பு !

தீக்குளிக்க மறுத்து
இறங்க வேண்டினாள் இராமனை
நவீன சீதை !

இப்போது கிட்டாது
கட்டை விரல் காணிக்கை
உணர்ந்தார் துரோணர் !

முற்றிலும்  உண்மை
மனம் ஒரு குரங்கு
தாவிக் கொண்டே !

திரைகடல் ஓடி
தேட வேண்டாம் திரவியம்
உணர்த்தியது கொரோனா !

கருத்துகள்