எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் !
- கவிஞர் இரா. இரவி
*****
இளையநிலா பொழிகிறது என்ற பாடலின் மூலம்
இளையநிலாவையே மனதில் பொழிய வைத்தவர்!
ஆயிரம் நிலவே வா அற்புதப் பாடல் பாடி
அன்பான எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்த்தவர்
ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியவர்
கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர்
இனிமையான குரலால் உள்ளம் கவர்ந்தவர்
எந்தப்பாடல் பாடினாலும் இனிமை சேர்த்தவர்
இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர்
இளையராசா இசையில் இராசாங்கம் நடத்தியவர்
விசுவநாதன் இசையில் விசுவரூபம் எடுத்தவர்
வடக்கே இந்தியிலும் பாடல்கள் பாடியவர்
நடிகராகவும் திரைப்படத்தில் நடித்தவர்
நாடே போற்றும் நல்ல பாடகரென பெயரெடுத்தவர்
சகலகலாவல்லவர் ஆற்றல்கள் மிக்கவர்
சகலகலாவல்லவன் படத்திலும் பாடியவர்
வயதானபோதும் இளமையாகவே பாடியவர்
வாய் திறந்தாலே இனிமையை இசைத்தவர்
கூட்டு பிரார்த்தனை எல்லாம் நடத்தினார்கள்
கூடு விட்டு உயிர் பிரிந்தது சோகம்
மூச்சுவிடாமல் பாடி முயற்சி செய்தவர்
முன்னேற்றம் கண்டு வாழ்வில் உயர்ந்தவர்
தாய்மொழி தமிழ் இல்லை என்றபோதும்
தாய்மொழியாக தமிழை நேசித்துப் பாடியவர்
எண்ணிலடங்காத பாடல்களைப் பாடியவர்
எல்லா மொழிகளிலும் பாடல்கள் பாடியவர்
எல்லோருக்கும் பிடிக்கும் அவர் பாட்டு
எங்கும் ஒலிக்கும் எதிரொலிக்கும் அவர் பாட்டு
பாலசுப்ரமணியனுக்கு மரணம் இல்லை
பாடிய பாடல்களில் என்றும் வாழ்வார்.
--
கருத்துகள்
கருத்துரையிடுக