ஹைக்கூ - 2020. பதிவு - 31
*************************************
அன்பர்களே வணக்கம்.
27.04.2020 முதல் தொடர்ந்து வெளி வரும் இப்பகுதியில், தமிழ்நெஞ்சம் பதிப்பகத்தின் 'ஹைக்கூ - 2020' என்னும் கவிதை தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள 101 கவிஞர்களின் 2020 ஹைக்கூகளும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளிவருகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு கவிஞரின் 20 ஹைக்கூகள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் பதிவாகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதிவில் கவிஞர் இரா. இரவி அவர்களின் 20 ஹைக்கூகள்
(பக்கம் 324.- 326) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற 70 கவிஞர்களின் படைப்புகளும் ஆங்கில மொழி
யாக்கத்துடன் வெளிவரவுள்ளது. அடுத்த பதிவில் ஆங்கில மொழியாக்கத்துடன் இடம் பெறவுள்ள கவிஞர் மாலதி சந்திரசேகரன் (பான்ஸ்லே) அவர்கள். வாருங்கள் கவிஞர் இரா. இரவி அவர்களின் ஹைக்கூகளை ரசிப்போம்.
=================================
(1)
அழுகையை நிறுத்தியது
அலைபேசி கற்றதும்
குழந்தை.
It stopped crying
once it's learnt to
handle cell phone
(2)
வீட்டுக்கு வீடு
வாசல் போலவே
பிரச்சனை
As if threshold
exists in house to house
problems prevail too
(3)
நான்கு சுவருக்குள் நடப்பது
நாடு முழுவதும் ரசிப்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சி.
Entire nation admires
what happens within fourwalls
television programmes
(4)
வெளியில் இல்லை
உன்னிடம் உள்ளது
நிம்மதி
Not exists outside
It remains within you
the peace of mind
(5)
பல்டி அடிப்பதில்
வல்லரசர்கள்
அரசியல்வாதிகள்
They're most powerful kings
in performing somersault
the politicians.
(6)
சின்னத் திருடனுக்குச் சிறை
பெரிய திருடனுக்கு
வெளிநாடு
Imprisonment to a pilferer
facility awaits to visit abroad
to a robber
(7)
பாகவதரை மிஞ்சினார்கள்
சுதிமாற்றிப் பாடுவதில்
அரசியல்வாதிகள்
They've transgressed master of music
to sing, changing pitch of tone
the politicians
(8)
குற்றவாளிகளிடம்
சிறையிலும் பாரபட்சம்
முதல் வகுப்பு
Among the prisoners
partiality prevails in prisons
the first class.
(9)
இந்திரன் சந்திரன் அன்று
அய்யோக்கியன் இன்று
அரசியல்வாதி பேச்சு
"Indra..... Chandra...." then
"You scoundrel....," now
Politicians' behaviour
(10)
வருடா வருடம்
பரப்புகின்றனர் வதந்தி
கடவுளின் பெயரால்
Year by year
they spread rumours
in the name of God
(11)
காமராசர், கக்கன்
காலத்தோடு முடிந்தது
அரசியலில் நேர்மை
It's finished
with the duration of Kamaraj and Kakkan
sincerity in politics
(12)
பாவத்தில் பங்கு
நிறைந்து வழிந்தது
கோயில் உண்டியல்
Share in the sin
It is overflowing
the temple's alms box
(13)
தருகின்றார் முன்னுரிமை
பித்தலாட்டக்காரனுக்கு
அரசியலில்
They give preference
to a fraudster
in politics
(14)
ஒன்றும் ஒன்றும்
இரண்டல்ல ஒன்று
காதல் கணக்கு
One plus one
is equal to one, not two
in the arithmetic of love
(15)
நியாய விலைக் கடையில்
அநியாயம்
எடைக்குறைவு
Injustice rendered in
fair price shop
underweight
(16)
ஒருவரை ஒருவர் மிஞ்சினர்
ஊழல் புரிவதில்
அரசியல்வாதிகள்
One transgressed another
In making corrupt practice
the politicians
(17)
சேர்ந்து இருந்தனர்
குடும்ப உறுப்பினர்களள
குடும்ப அட்டையில்
United together
all members of the family
in ration card
(18)
விடுமுறை நாட்களில்
குடிமகன்களால் நிறைகிறது
மதுக்கடை
During holidays
It is filled by drunkards
the liquor store
(19)
இயற்கை மகுடம்
உழைப்பவருக்கு
வியர்வைத் துளி
Crown of nature
for the labourers
the perspiration
(20)
குறித்து வைக்காததால்
மறந்து போகிறது
நல்ல ஹைக்கூ
For not making a note of,
It is forgotten
a good haiku
****************************************
ஆக்கம் : கவிஞர் இரா. இரவி
மொ.பெ. வே. புகழேந்தி
By. : Poet R. Ravi
Trans : PVP
கருத்துகள்
கருத்துரையிடுக