அரசியல்! கவிஞர் இரா .இரவி !
அன்று தொண்டுக்காக வந்தனர் அரசியலுக்கு
இன்று துட்டுக்காக வருகின்றனர் அரசியலுக்கு !
அன்று நல்லவர்கள் பெருகி இருந்தனர் அரசியலில்
இன்று அல்லவர்கள் பெருகி உள்ளனர் அரசியலில் !
அன்று மக்களுக்காக சேவை அரசியல் செய்தனர்
இன்று தன் மக்களுக்காக அரசியல் செய்கின்றனர் !
அன்று சொந்தப் பணம் தந்து மகிழ்ந்தனர்
இன்று சின்ன மீனை இட்டு சுறாமீன் பிடிப்பு !
அன்று காந்தி காமராசர் கக்கன் அரசியலில்
இன்று அவர்களைப் போல ஒருவரும் இல்லை !
அன்று வாடகை வீட்டில் வாழ்ந்தனர் தலைவர்கள்
இன்று மாட மாளிகைகளில் வாழ்கின்றனர்
அன்று அம்மாவிற்குக் கூட கூடப் பணம் தர மறுத்தார்
இன்று வாரிசுகளுக்கு கோடிகளை வழங்குகின்றனர் !
அன்று ஊழல் என்னவென்று அறியாது வாழ்ந்தனர்
இன்று அரசியலில் எங்கும் எதிலும் ஊழலோ ஊழல்!
கருத்துகள்
கருத்துரையிடுக