சுயதரிசனம்! கவிஞர் இரா.இரவி !

 



சுயதரிசனம்!   கவிஞர் இரா.இரவி !


உங்களைப்  பற்றிய எண்ணம் எப்போதும் 

உங்களிடம் உயர்வாகவே இருக்கட்டும் !


தாழ்வு மனப்பான்மை இருந்தால் உடன் 

தகர்த்து எறிந்து தன்னம்பிக்கைப் பெறுங்கள் !


பலவீனம் எதுவும் இருந்தால் நீக்கிடுங்கள் 

பலம் பெற முயற்சிகள் செய்யுங்கள் !


கெட்ட பழக்கம் ஏதேனும் இருந்தால் 

கெட்ட கனவாக நினைத்து மறந்திடுங்கள் !


திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் 

தன்னை நம்பும் வளமையைப்  பெறுங்கள் !


உங்களை நீங்களே எடைப் போட்டுப் பாருங்கள் 

உங்கள் எடை குறைவென்றால் உயர்த்துங்கள் !


முடியாது   நடக்காது தெரியாது என்பதற்கு 

முற்றுப்புள்ளி உடன் வைத்து முயலுங்கள் !  

.

என்னால் முடியும் மற்றவரால் முடிவது 

என்றே முயன்று சாதனை நிகழ்த்துங்கள் !

- கவிஞர் இரா .இரவி


கருத்துகள்