ஆட்டுக்குட்டியை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !

 


ஆட்டுக்குட்டியை நனைத்த மழை !

கவிஞர் இரா .இரவி !

வராது வந்த கோடைமழையை எல்லோரும்
வரவேற்ற போது ஆட்டுக்குட்டியை நனைத்தது!

ஆட்டுக்குட்டியும் அடைந்தது ஆனந்தம்
அடைமழைக்கு நடுங்கும் ஆட்டுக்கு குதூகலம் !

தண்ணீர் இன்றி தவித்திட்டக் காரணத்தால்
தாவி வந்து பிடித்து வைத்தனர் மழைநீரை!

குடை ஏதும் பிடிக்காமல் சிலர் வந்து 
குதூகலமாக மழையில் நனைந்து மகிழ்ந்தனர்!

வானிலிந்து வருகை தந்திட்ட வரம்  மழை  
வளரும் செடிகளுக்கு உயிரூட்டிய உரம் மழை!

இல்லாதபோது தான் அருமை புரியும்
இனிய மழை பெய்யாதபோது புரிந்தது!

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம் உணர்ந்தனர்
மழைநீர் மனித இனத்தின் உயிர்நீர்!

மாமழை போற்றுவோம் மாமழை போற்றுவோம்
மரங்களை நட்டுவைத்து மாமழை பெறுவோம்!

- கவிஞர் இரா .இரவி

கருத்துகள்