பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !





பொதிகை மின்னல் தந்த தலைப்பு.

முகமூடி!   கவிஞர் இரா. இரவி !



அணிந்தால் குற்றம் அன்று
அணியாவிடில் குற்றம் இன்று
முகமூடி!

பயன்படுத்தி எறியாதீர்
பாதுகாப்பாக குப்பையிடுவீர்
முகமூடி!

தப்பிக்க உதவிடும்
அறுவைகளிடமிருந்து
முகமூடி!

உங்கள் நோய் பிறருக்கும்
பிறர் நோய் உங்களுக்கும்
பரவாதிருக்க முகமூடி!

தொற்று தொற்றாதிருக்க
பற்றுடன் பற்றுக
முகமூடி!

நன்றே செய்வோம்
இன்றே செய்வோம்
முகமூடி அணிவோம்!

சுவாசம் தூய்மையாகும்
தூசிகளைத் தடுக்கும்
முகமூடி!

அடையாளம் தெரியாததால்
அப்படியே நகர்ந்திடலாம்
முகமூடி!

பல வண்ணங்களில்
பல வகைகளில்
முகமூடி!

செலவென்று கருதாதீர்
நன்மையென்று கருதுவீர்
முகமூடி!

ஒருமுறை பயன்படுத்தல் உண்டு
துவைத்துப் பயன்படுத்தல் உண்டு
முகமூடி!

கைக்குட்டையாவது கட்டுக
தண்டத்தொகை கட்டாதீர்
முகமூடி!

கொள்ளையனுக்கு அன்று
கொள்ளை நோய் தடுக்க இன்று
முகமூடி!

முன் எச்சரிக்கை இது
முன்மொழியுது உலகமே
முகமூடி!

மறக்காது அணியுங்கள்
மனதில் நினைவில் கொள்ளுங்கள்
முகமூடி!

வணிகம் செய்திட
தொழில் தந்தது
முகமூடி!

கொடிய கொரோனா
ஒழியும் வரை அணிக
முகமூடி!

--

கருத்துகள்