நூலகம் இருவரி விழிப்புணர்வு வாசகம் ! கவிஞர் இரா .இரவி !'


நூலகம் இருவரி விழிப்புணர்வு வாசகம் !
கவிஞர் இரா .இரவி !'

அகம் தூய்மையாக்குமிடம்
அறிவு வளர்க்கும் அற்புத இடம் !

பண்பாடுப் போதிக்கும் பயனுள்ள இடம்
அறவழிப்படுத்தும் அழகிய இடம்


அறிவாளிகள் இருக்கும் அறிவார்ந்த இடம்
அமைதிப் படுத்தி மதி வளர்க்கும் இடம்


விலைமதிப்பற்ற நூல்களின் வசிப்பிடம்
மறைந்த தலைவர்கள் மறையாமல் வாழுமிடம்


புரட்டப் புரட்ட புத்திப் புகட்டுமிடம்
எடுத்துப் படிக்க இனிமை கூட்டுமிடம்

வயது பேதமின்றி வாசகரை உயர்த்துமிடம்
சாதி மத பேதமின்றி சமத்துவம் கற்பிக்குமிடம்


அரசுப்பணி ஆட்சிப்பணி  கிடைக்கக் காரணம்
கடன் கேட்காத நல்ல நண்பன் இருப்பிடம் !
கருத்துகள்