சமூக இடைவெளி
இருவரி விழிப்புணர்வு வாசகம் !
கவிஞர் இரா .இரவி !
விழித்திரு தனித்திரு
வள்ளலார் சொன்னதை நினைத்திரு !
விலகி விலகி நின்றால்
வரவே வராது தொற்று !
தீண்டாமை பாவச்செயல் அன்று
தீண்டாமை நன்று இன்று !
கிருமி ஒழியும் வரை
கொஞ்சம் விலகி இருங்கள் !
ஒருவரை ஒருவர் ஒட்டாமல் நின்றால்
ஒட்டாது உங்களை மற்றவர் கிருமி !
வாகன இடைவெளி விபத்தைத் தடுக்கும்
மனித இடைவெளி நோயினைத் தடுக்கும் !
கருத்துகள்
கருத்துரையிடுக