ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



வெளியே சென்றால் கொரோனாத் தொற்று
உள்ளேயே இருந்தால் பட்டினிக் கொடுமை
ஏழைகளுக்கு !


மளிகைப் பொருட்களை கூட
சட்ட விரோதப் பொருட்களென
மறைந்து மறைந்து வாங்கும் நிலை !


விற்காத சோப்பெல்லாம்
விற்கவைத்தது
கொரோனா !

சமூக இடைவெளி பற்றி
சிந்திக்க பொறுமை இல்லை
பட்டினிக் கொடுமையில் !

தினக்கூலிப் பணியாளர்களுக்கு
தினமும் துயரமும் துன்பமும்
கொரோனா விளைவு !






கருத்துகள்