எழுந்து வாடா இமயம் நீயே ! கவிஞர் இரா .இரவி !
உறக்கம் விடுத்து எழுந்து வாடா இமயம் நீயே
உனக்கு இணை வேறு யாருமில்லை நீயே !'
உறக்கம் விடுத்து எழுந்து வாடா இமயம் நீயே
உனக்கு இணை வேறு யாருமில்லை நீயே !'
தேனீயிடம் நீ உழைப்பைக் கற்றுக்கொள்
தரணி போற்ற உழைத்து வாழ் வேண்டும் !
எறும்பிடம் நீ சுறுசுறுப்பைக் கற்றுக் கொள்
எதிர்காலத்திற்கு சேமித்து வாழ் வேண்டும் !
காகத்திடம் நீ ஒற்றுமையைக் கற்றுக்கொள்
கற்பதை நிறுத்தாமல் வாழ் வேண்டும் !
நரியிடம் நீ தந்திரத்தைக் கற்றுக்கொள்
நல்லவனாகவும் வாழ்ந்திட வேண்டும் !
புலியிடம் நீ வீரத்தைக் கற்றுக்கொள்
புவி போற்றிட வாழ்ந்திட வேண்டும் !
தாழ்வு எண்ணத்தை தகர்த்திட வேண்டும்
தன்னம்பிக்கையை வளர்த்திட வேண்டும் !
நல்லவனாகவும் வாழ்ந்திட வேண்டும் !
புவி போற்றிட வாழ்ந்திட வேண்டும் !
தாழ்வு எண்ணத்தை தகர்த்திட வேண்டும்
தன்னம்பிக்கையை வளர்த்திட வேண்டும் !
உலகில் பிறந்த அனைவரும் ஒன்றுதான்
ஒற்றுமையோடு நீ வாழ்ந்திட வேண்டும் !
ஒற்றுமையோடு நீ வாழ்ந்திட வேண்டும் !
கருத்துகள்
கருத்துரையிடுக