இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !





இரண்டு கால் மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
நாயுக்குள்ள நன்றியுணர்வு கூட
நன்றிகெட்ட மனிதருக்கு இல்லை !
நாயினும் கீழான மனிதர்கள்
நயவஞ்சக தன் நல மாக்கள் !
உயிரைக் கொடுத்து உயிர்கள் காத்த
ஒப்பற்ற மருத்துவரை அவமதிப்பு !
மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டியவரை
அவமரியாதை செய்து ஊர்தியை தாக்கினர் !
நெஞ்சு பொறுக்கவில்லை செய்தியைக் கேட்டு
நினைத்துப் பாருங்கள் மருத்துவரின் தியாகத்தை !
தன்நலத்தோடு மருத்துவர் இருந்திருந்தால்
தன் சுற்றத்துடன் உயிரோடு வாழ்ந்திருப்பார் !
தன்நலம் கருதாது மருத்துவம் புரிந்து
தடுத்துள்ளார் போக இருந்த உயிர்களை !
ச்சீ ! ச்சீ ! மனிதர்களே இல்லை நீங்கள்
ச்சீ ! ச்சீ ! இரண்டு கால் மிருகங்கள் நீங்கள் !

கருத்துகள்