நம் வீடே நமக்குக் காப்பு ! கவிஞர் இரா .இரவி !
வெளியே செல்ல வேண்டாம் சென்றால்
வந்து தொற்றிக் கொள்ளும் கொல்லும் !
உருவமற்ற கொடிய கிருமி அரக்கன்
ஓட்டினால் உயிர் பறிக்கும் முரடன் !
இதுவும் கடந்து போகும் என்றெண்ணி
இனிமையாக நேரம் கழிப்போம் இல்லத்தில் !
தீமையிலும் நன்மை என்று எண்ணுவோம்
தனிமையை ரசித்துப் பழகி வாழ்வோம் !
அச்சம் என்பதை அறவே அகற்றி விட்டு
அனைவரிடமும் அன்பாக வாழ்ந்திடுவோம் !
நேசிக்க நேரமின்றி பறந்து ஓடினோம்
நேசிக்கக் கிடைத்த நாள் வாய்ப்பு இது !
நேசிக்கக் கிடைத்த நாள் வாய்ப்பு இது !
இல்லத்தில் இல்லாமல் வெளியே திரிந்தோம்
இல்லத்தில் இருந்து இனிமை சேர்ப்போம் !
குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு
கொடிய கொரோனா வராமல் காப்பு !
கருத்துகள்
கருத்துரையிடுக