இளங்கோ முத்தமிழ் மன்றம் தந்த தலைப்பு !
தனிமையில் இனிமை காண முடியும்
தனிமையை ரசித்து வாழ வேண்டும் !
தனிமையை தண்டனையாக மனம் நினைத்தால்
தனிமை கொடுமையாக்கிக் கொன்றுவிடும் !
இனிமையான மலரும் நினைவுகளை மனதில்
இனிதே நினைத்து நினைத்து மகிழலாம் !
நல்ல நூல்கள் படிக்க உதவும் தனிமை
நல்ல காட்சிகள் காண உதவும் தனிமை !
படைப்பாற்றல் வளர்க்க உதவும் தனிமை
படைப்புகள் சிறக்க உதவும் தனிமை !
படைப்புகள் சிறக்க உதவும் தனிமை !
எதிர்கால திட்டத்திற்கு உதவும் தனிமை
இலட்சியத்தை அடைந்திட உதவும் தனிமை !
கல்வியில் சிறந்திட உதவும் தனிமை
கற்றதை அசைபோட உதவும் தனிமை !
ஆழ்ந்த சிந்தனைக்கு உதவும் தனிமை
ஆழ்நிலை தியானத்திற்கு உதவும் தனிமை !
உடற்பயிற்சி செய்திட உதவும் தனிமை
உள்ளம் சிறந்திட உதவும் தனிமை !
வெறுப்பாகக் கருதினால் கசக்கும் தனிமை
வாய்ப்பாகக் கருதினால் இனிக்கும் தனிமை !
கருத்துகள்
கருத்துரையிடுக