144. கவிஞர் இரா .இரவி !
பெரி வணிக வளாகங்கள் மூடப்பட்டன
சிறிய வணிக கடைகள் திறக்கப்பட்டன !
வழக்கம்போல கீரை விற்பவர் மிதி
வண்டியில் வந்து விற்று சென்றார் !
மருத்துவமனைகள் பல மூடப்பட்டன
மருந்தின்றி கை வைத்தியம் கை கொடுத்தன !
நகைக்கடைக்காரர்களின் கொள்ளை நின்றது
நகை அட்சய திருதியிலும் விற்காமல் நின்றது !
நகை அட்சய திருதியிலும் விற்காமல் நின்றது !
திரையரங்குகளின் கொள்ளை நின்று போனது
திரைப்படம் தொலைக்காட்சியில் வந்தது !
துணிக்கடைக்காரர்களின் கொள்ளை நின்றது
துணி புதுத்துணி அவசியமின்றி போனது !
சவரம் செய்யும் செலவு கூட சேமிப்பானது
சவரக்கடைக்காரர்கள் பட்டினியில் வாடினர் !
பணக்காரர்களும் நடுத்தர வர்க்கமும்
பணத்தால் உண்டு வாழ்ந்தனர் மகிழ்வாக !
பணத்தால் உண்டு வாழ்ந்தனர் மகிழ்வாக !
ஏழைக்குடும்பங்கள் பசி பட்டினியில்
இன்னலில் வாடி வதங்கி விட்டனர் !
மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டன
மது விரும்பிகள் அலைபாய்ந்து தவித்தனர் !
மது விரும்பிகள் அலைபாய்ந்து தவித்தனர் !
குடும்பத்தில் மதுவால் வந்த துன்பம் ஒழிந்தது
குடும்பத்தில் மகிழ்ச்சி வந்து குதூகலமானது !
தடை முடிந்து எல்லாவற்றையும் திறங்கள்
திறக்கவே வேண்டாம் மதுக்கடைகள் மட்டும் !
கருத்துகள்
கருத்துரையிடுக