கொரோனா ! கவிஞர் இரா .இரவி !கொரோனா ! கவிஞர் இரா .இரவி !

குலை நடுங்க வைக்கும் கொடிய நோய்
குவலயத்தை ஆட்டிப் படைக்கும் நோய் !

சீனாவில் தொடங்கி இத்தாலியைத் தொட்டு
சிங்கார சென்னைக்கும் வந்து விட்டது !

வழிபாட்டுத் தலங்களை மூட வைத்தது
வெளியில் நடமாட முடியாமல் முடக்கியது !

முதலில் ஒரு நாள் ஊரடங்கு என்றார்கள்
முதல் நாள் முடிந்ததும் ஏழு நாட்கள் என்றனர் !

அடுத்த நாளில் தலைமை அமைச்சர் பேசினார்
இரண்டாம் நாளில் இருபத்தி ஒரு நாள் என்றனர் !

அதிர்ச்சியில் மக்கள் ஆனாலும் கடைப்பித்தனர்
அகிலம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியது !

இத்தாலியில் குடும்பத்தையே எரித்ததாக
இங்கே செய்தி காட்டுது தீயாகப் பரவியது !

தனித்திரு விழித்திரு கூட்டம் கூடாதே
தனிமை இனிமை என்றே நாள்களை நகர்த்து  !

கருத்துகள்