ஏர்வாடியாரின் கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : மகேஸ்வரி, கோவை !





ஏர்வாடியாரின் கருவூலம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !

நூல் விமர்சனம் : மகேஸ்வரி, கோவை !

23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர்.சென்னை 6000017.
பேச 044-24342810.பக்கம் 114.விலை 70 ரூபாய்..
vanathipathippakam@gmail.com 

கவிஞர் இரா. இரவி அவர்களின் 22-ம் நூலாகிய ‘ஏர்வாடியார் கருவூலம்’ நூல் வாசித்த பிறகு மதிப்பிற்குரிய திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன அவர்களது படைப்புகளைப் பற்றியும், சிறப்புகளையும், அவர் தமிழுக்கு ஆற்றியுள்ள பங்கினையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது.

தமிழறிஞர்களைத் தேடித் தேடி அவர்களையும், அவர்களின் படைப்புகளையும் ஆழ வாசித்து, நேசித்து தமிழ் விருந்து படைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.  இலக்கிய இணையர் கருவூலம், இறையன்பு கருவூலம், ஏர்வாடியார் கருவூலம் என தொகுத்து ஆகச்சிறந்த அனைத்து தமிழ் அறிஞர்களையும் இந்த நூல்களில் கொண்டு சேர்த்துள்ளது கவிஞர் இரா. இரவி அவர்கள் தமிழ்க்காற்றும் தொண்டு எனலாம்.

மேன்மைமிகு ஏர்வாடியார் அவர்கள் இளம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் தம் கவிதை உறவு இதழ் மூலம் ஊக்கப்படுத்தி வருவதை கவிஞர் சிறப்பித்து கூறியுள்ளார்கள். ஆம்! தாம் அறிந்து கொண்டிருக்கிற தமிழையும், தமிழின் தொன்மையையும் உயர்த்திப் பிடித்து, அனைவரையும் அரவணைத்து, ஆதரவு தந்து தமிழோடு தமிழறிஞர்களையும், வளர்த்தெடுக்கும் பணிகளை செவ்வனே, ஆரவாரமின்றி செய்து கொண்டுள்ளார் ஏர்வாடியார் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஏர்வாடியார் அவர்களின் சொற்கள் கவிஞர் இரவி அவர்களைக் குறிப்பிட்ட வாக்கியம் மகா உண்மை!

“இரவி அவர்கள் விழுது விட்டு வளர்ந்திருக்கிற ஆலாகவும்
      இருக்கிறார் ; நல்ல ஆளாகவும் இருக்கிறார்”.

தம் கவித்திறத்தாலும், தமிழறிஞர்களை போற்றுதலாலும், விழுது விட்டு வளர்த்து தான் இருக்கிறார் கவிஞர் இரவி அவர்கள்! மேன்மையாக பழகி, முதன்மையாக நட்பு கொண்டு, பாரபட்சமின்றி பகிர்ந்து சிறந்த மனிதராகவும் திகழ்கிறார் கவிஞர் இரவி அவர்கள்!

தாம் அறிந்து கொள்கிற அனைத்தையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் தாராள குணம் கொண்டவர் கவிஞர் இரா. இரவி அவர்கள். தனது முகநூல் பக்கத்திலும், வலைதளத்திலும், வலைப்பூவிலும், தமிழ் படைப்புகளையும், தமிழறிஞர்களையும் பகிர்ந்து உலகறியச் செய்து கொண்டிருக்கிறார் இரவி அவர்கள்.

ஏர்வாடியார் கருவூலம் நூலிற்கு பேராசிரியர் தமிழ் இயலன் அவர்கள் சிறப்பானதொரு வாழ்த்துரை கொடுத்துள்ளார்கள்.

“பக்கம் பக்கமாய் வளர்வதல்ல கவிதை
      இதயத்தின் பக்கம் வருவதே கவிதை”

-இதயத்திற்கு அருகில் வந்த
எழிலான ஏர்வாடியார் கவிதை.

      நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
      கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு!
      தங்களின் சிறந்த படைப்புக்கு!

கருத்துகள்