தனித்திரு விழித்திரு ! கவிஞர் இரா .இரவி !
கொரோனா கொடிய நோய் தொற்று புரிந்திடு
கூடி இருந்தால் தொற்று விடும் அறிந்திடு !
சீனாவை சின்னா பின்னமாகியது கொரோனா
சப்பானையும் கொரோனா சிதைத்து விட்டது !
இத்தாலியின் மக்கள் தொகையைக் குறைத்து
இங்கிலாந்து இளவரசரையும் தொற்றியது !
அமெரிக்காவிற்கு அடி மேல் அடி கொடுத்தது
அதிபரையும் சோதனைக்கு உள்ளாக்கியது !
அதிபரையும் சோதனைக்கு உள்ளாக்கியது !
பரவாத நாடே இல்லை என்னுமளவிற்கு
பரவி விட்டது கிருமி உலகம் முழுவதும் !
பரவி விட்டது கிருமி உலகம் முழுவதும் !
வழிபாட்டுத் தலங்களை மூட வைத்தது
வழியே தெரியாமல் தவிக்க விட்டது !
வணிக நிறுவனங்களை முடக்கி விட்டது
வயிற்றுக்கு உணவு கிடைப்பதே சாதனையானது !
கூட்டமாகக் கூடுவதை முழுவதும் நிறுத்திடு
கைகளை சோப்பால் அடிக்கடி கழுவிடு !
கைகளை சோப்பால் அடிக்கடி கழுவிடு !
கொடிய அரக்கன் கொரோனாவை கொல்ல
கண்டுபிடிக்கப்படவில்லை இன்னும் மருந்து !
விரைவில் மருத்துவர் மருந்து காண்பர்
வரும்வரையில் வீட்டிலிருப்பதே மருந்து !
வீராதி வீரனையும் விட்டு வைக்காது
சூராதி சூரனையும் தள்ளி வைக்காது !
கண்ணுக்குத் தெரியாத கிருமியிடம் தோற்றோம்
கர்வம் அகற்றி மனிதம் போற்றி வாழ்வோம் !
கர்வம் அகற்றி மனிதம் போற்றி வாழ்வோம் !
கருத்துகள்
கருத்துரையிடுக