குறும்பா வேந்தர் இரா.ரவி அவர்களுக்கு வாழ்த்து! மதுரை பாபாராஜ்.


குறும்பா வேந்தர் இரா.ரவி அவர்களுக்கு வாழ்த்து!
மதுரை பாபாராஜ்.

மதுரை வடக்குமாசி வீதி அளித்த
மதுரகவி நண்பர் இரவி குறும்பா
அருவி! எழுச்சி அலைகளின ஆழி!
பெருமை மதுரைக்குத் தான்.
இணைய தளங்கள் முகதூல் மூலம்
கணக்கற்ற பாக்களைப் பூக்கவைக்கும் நண்பர்
பணிக்களமோ சுற்றுலா சார்ந்த துறையாம்!
கனிமனம் கொண்டவரை வாழ்த்து.
அன்புத் தமிழ்த்தேனீ மோகன் தலைமையில்
எண்ணற்ற பட்டிமன்றம் பேசியவர்! தென்னவனின்
வண்டமிழ்ப் பாவரங்கில் பங்கேற்ற பாவலர்!
பண்பாய்ப் பழகும் ரவி.
மாமதுரைப் பாவலர் பேரவை நிர்வாகி!
மாவட்ட ஆட்சியர் போற்ற விருதுபெற்றார்!
பாவலர் நேர்காணல் தன்னைத் தொலைக்காட்சி
ஆவலுடன் இங்கே ஒளிபரப்பி உள்ளன!
பாவலர் வாழியவே நீடு.
இருபத் திரண்டுநூல்கள் தம்மைப் படைத்தே
அரும்பெரும் சாதனை முத்திரை கொண்டவர்!
விருதுகள் பட்டங்கள் தேடிவந்த பாவலர்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
பாவலரின் பாக்கள் கல்லூரி,பல்கலைக்
கூடத்தின் பாடத்தில் இங்கே இடம்பெற்று
சாதனை நாட்டிய நற்பெருமை கொண்டவர்!
சாதனைப் பாவலரை வாழ்த்து.
முகநூலை லட்சக் கணக்கானோர் பார்த்த
சிறப்புண்டு! விமர்சனம் கட்டுரைகள் தந்தே
மகத்தாகப் போற்றப் படுகின்றார் நாளும்!
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.
நற்கூடல் மாநகரின் நற்றமிழ்ப் பாவலர்!
கற்கண்டுச் சொல்லெடுத்து நாளும் குறும்பாக்கள்
அற்புதமாய் குற்றால வீழ்ச்சிபோல் தந்துவக்கும்
முற்போக்குச் சிந்தனை யாளர் ரவியிங்கே
வெற்றிபெற்று வாழ்க வளர்ந்து.

கருத்துகள்