கொரோனா வைரசு ! கவிஞர் இரா .இரவி !





கொரோனா வைரசு ! கவிஞர் இரா .இரவி !

புதுப்புது பெயரில் புதுவித நோய்கள்
பூமியில் வந்து கொண்டே இருக்கின்றன. !

சீனாவின் மக்கள் தொகை குறைக்க
சினம் கொண்ட இயற்கையின் சீற்றமோ ?

மருந்தில்லா நோயே இல்லை உலகில்
மருந்து கண்டுபிடித்து விட்டனர் கொரோனாவிற்கும் !

சீனாவிலிருந்து வருவதை தடை செய்வதை விட
சீரழிக்கும் நோய் வராமல் தடுப்பதே சிறப்பு !

சக மனிதனிடம் தீண்டாமை காட்டுதல்
சகமனிதனுக்கு அழகல்ல உரைத்தவர் காந்தியடிகள் !

வந்தாரை வரவேற்கும் நம் நாட்டில்
வராதே என தடுப்பது பண்பு அன்று !

நோய் வராமல் தடுப்பது எப்படி ? என ஆராயுங்கள்
நோயாளிகளைத் தடுப்பது முறையன்று !

கொரோனா என்ற பெயரைப் போலவே
கரடுமுரடான நோய் தான் போல !

ஒரு ஊரையை சுருட்டி விட்டது
ஒரு நாட்டையே கலங்க வைத்தது !

நோயற்ற வாழ்வு வாழ்ந்திட மனிதர்களை
நாளும் நாமும் பழக்கி வைப்போம் !

வந்தபின் வருந்தி அழுது புலம்பாமல்
வ்ருமுன் காக்கும் நடவடிக்கை எடுப்போம் !

கிருமிகள் பரவாமல் தடுக்க வேண்டும்
கிருமிகளை ் உடன் அழிக்க வேண்டும் !

பாம்பு எலி உண்பதை நிறுத்திடுங்கள்
பாம்பால் தான் பரவியது என்றும் கூறுகின்றனர் !

நல்ல உணவையே நாளும் உண்ணுங்கள்
நாறும் உணவுகளை குப்பையில் போடுங்கள்!

சுத்தம் சுகம் தரும் உண்மையிலும் உண்மை
சுகாதாரமான வாழ்க்கை நமக்கு வசமாகட்டும்!

கொரோனா வைரசை ஒழித்துக் கட்டுவோம்
கொரோனா பாதித்தவரிடம் அன்பு செலுத்துவோம்!

கருத்துகள்