பொதிகை மின்னல் தந்த தலைப்பு !
காதலாகி! கவிஞர் இரா. இரவி.
கூட்டத்தில் தனிமை
தனிமையில் கூட்டம்
காதலாகி!
ஒன்றும் ஒன்றும்
இரண்டல்ல ஒன்று
காதலாகி!
கால்கள் தரையில்
மனமோ வானத்தில்
காதலாகி!
வளர்பிறையானது
இன்பம்
காதலாகி!
தெரியவில்லை வேறுபாடு
கனவுக்கும் நனவுக்கும்
காதலாகி!
அவள் நினைவு தவிர
அனைத்தும் மறந்து விடுகிறது
காதலாகி!
யாரும் பார்க்காத போதும்
யாவரும் பார்ப்பதாக எண்ணம்
காதலாகி!
தலை வாரியே
அழுதது சீப்பு
காதலாகி!
குறைந்து வருகின்றன
பசியும் தூக்கமும்
காதலாகி!
கன்னியின் நினைவால்
கூடியது மெருகு
காதலாகி!
கனவில் அவள் முகம்
நினைவிலும் அவள் முகம்
காதலாகி!
சிந்தையில் நிறைந்து
சித்திரவதை செய்கிறாள்
காதலாகி!
கசிந்து உருகினேன்
கன்னியின் நினைவால்
காதலாகி!
சித்தம் கலங்கிய
சித்தன் ஆனேன்
காதலாகி!
இரசாயன மாற்றம்
ரசனைமிக்க மாற்றம்
காதலாகி!
உணர்ந்தவர் உணரும்
உன்னத உணர்வு
காதலாகி!
அவள் பெயர் நினைந்து
என் பெயர் மறந்தது
காதலாகி!
கருத்துகள்
கருத்துரையிடுக