ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  

உள்ளே சென்று
உருக்குலைத்து விடும்
உயிரைப் பறிக்கும் !  

உறுதி என்றபோதும்
என்று என்பதில் மர்மம்
இறப்பு !

பேச்சை நிறுத்தி
உழைப்பைப் பெருக்கும்
இதழ்கள் !

உச்சரிக்கும் போதே
ஒட்டிக்கொள்ளும்
உதடுகள் !

உமிழ்நீர் பரிமாற்றம்
உரம் சேர்க்கின்றது
காதலர்களுக்கு !

திருட முடியாதது மட்டுமல்ல
கொடுத்தாலும் குறையாதது
கல்வி !

நம்பிக்கை எனும்
நூல்அறுந்தால்
பிறக்கும் நோய் !

தொட்டிலில் தொடங்கி
கட்டில் மட்டுமல்ல
ஒலிக்கும் கருவறை வரை !

மணமாகும் வரை துணையிருப்பாள்
மனமானது மறப்பாள்
உலக இயல்பு !

கருத்துகள்