ஷார்ஜாவில் மதுரைக் கவிஞர் இரா. இரவி எழுதிய இலக்கிய இணையர் படைப்புலகம் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.






  ஷார்ஜாவில் மதுரைக் கவிஞர் இரா. இரவி எழுதிய இலக்கிய இணையர் படைப்புலகம் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.   


--

.ஷார்ஜாவில் நூல் அறிமுக நிகழ்ச்சி
ஷார்ஜா : ஷார்ஜாவில் மதுரைக் கவிஞர் இரா. இரவி எழுதிய இலக்கிய இணையர் படைப்புலகம் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் நூலை வெளியிட
ஹமீத் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் காரைக்குடி ஹமீத் அப்துல் காதர் பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய அவர் கவிஞர் இரா. இரவி அவர்களின் நூல் இலக்கிய இணையர்களான இரா. மோகன் மற்றும் நிர்மலா மோகன் ஆகியோரது படைப்புகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. கவிஞர் இரா. இரவி அவர்கள் இன்னும் பல நூல்களை படைக்க வேண்டும். இலக்கிய உலகத்துக்கு அவர் ஆற்றி வரும் சேவைகள் தொடர வேண்டும் என வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கவிஞர் ஜமால் முஹைதீன், யாசின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள்