பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் ! செல்வி இர. ஜெயப்பிரியங்கா ! திண்டுக்கல்.
பன்முகப் பார்வையில்;
கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் !
செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
திண்டுக்கல்.

இன்றைய இயந்திரமயமான சூழலில் புதுக்கவிதையை விட தாம் கூற வந்த கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைகூ! ‘மூன்று வரி முத்தாய்ப்பு ஹைகூ’ அளவு சிறியது அர;த்தம் பெரிது ஹைகூ! ஹைகூக் கவிதைகளின் மூலவேர்; ஜென் பௌத்தமாகும். 3, 7, 5 என்ற எண்ணிக்கையிலான அசைகளையும்.  மூன்றடிகளையும் உடையது ஹை;கூ.

தன்னம்பிக்கை கூறும் ஹைகூ

     எதையும் உடன்பாடாகக் காண்போரின் மனத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் என்றென்றும் குடியிருக்கும்.  இதையே கவிஞரும்

           “இமயம் செல்லலாம்
           இருகால்களும் இன்றி
           நம்பிக்கை இருந்தால்!”

                 “கைரேகையில் இல்லை
                கைகளில் உள்ளது
                 எதிர்;காலம்!”

           “சொத்துக்களில்
           சிறந்த சொத்து
           தன்னம்பிக்கை!”

     இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டு வருவது உடன்பாட்டுச் சிந்தனை.  இந்த நேர்;மறைச் சிந்தனையைப் புலப்படுத்தும் விதத்தில் ஆங்கிலத்தில் பல நூல்கள் வெளிவந்துள்ளன.  எதையும் உடன்பாட்டு நோக்கில் பார்;ப்பது, நம்பிக்கையோடு அணுகுவது என்பது தமிழ் மண்ணுக்குப் புதியது அல்ல.  இதையே வள்ளுவரும்,

           “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
           மெய்வருத்தக் கூலி தரும்.”                  (619)

என்று தம் குறளில் எடுத்துரைத்தார்.

இயற்கையைக் கூறும் ஹைகூ

     நம் முன்னோர்;கள் இயற்கையோடு ஒன்றி பிணைத்து வாழ்ந்தனர்; என்பதை சங்க இலக்கியங்கள் செம்மை சான்று பகர்;கின்றன.  இதையே ஹைகூ கவிதைகளும்,

           “பள்ளம் நிரப்பும்
           பொதுவுடைமைவாதி
           மழை!”

                 “வளர்த்திட்ட மண்ணிற்கு
                நன்றி சொன்னது மரம்
                 பூ உதிர்த்து!”

           “கழிவுநீர்; உறிஞ்சி
           இளநீர்; தந்தது
           தென்னை!”

                 “மரத்திற்கு
                 உரமானது
                 உதிர்;ந்த இலை!”

     மரங்களால் சுற்றுச்சூழல் வளமாகும், மனித வாழ்வு நலமாகும். மரம் வளர;க்க மழை பொழியும், மழை பொழிய வறுமை ஒழியும், ஆளுக்கொரு மரம் நடுவோம்,  மண்ணில் வாழ, நாளை மண்ணை மகிழ்வாய் ஆள. மரம் மனிதனின் மூன்றாவது கரம்.  மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கி விடும்.  மரமும், மழையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை ஹைகூ கவிதைகள் எடுத்துரைக்கின்றது.

பெண்அடிமைச் சிந்தனைகூறும் ஹைகூ

           “பாட்டி தாத்தாவிற்கு
           அம்மா அப்பாவிற்கு
           தொடரும் பெண்ணடிமைத்தனம்…”

                 “பேசினால் வாயாடி
                 பேசாவிட்டால் ஊமை
                 பெண்ணிற்குப் பட்டம்…”

           “பெண்களுக்கு
           படிப்பெதற்கு சொன்னவனை
           செருப்பால் அடி…”

     நாடு - தாய் நாடு, மொழி - தாய்மொழி.  மண்ணும், ஆறும் மாபெரும் சக்தியும் பெண்ணின் பெருமை பேசும். அகிலமாளும் ஆண்டவன் கூட.  அம்மை, அப்பன் ஆனாலும் பெண்கள் சமுதாயம் பிற்பட்டுக் கிடந்ததே! கிடக்கிறதே!  இனி ஒரு விதி செய்யவேண்டும்.  அவ்வையாய், மங்கையர;க்கரசியாய், மணிமேகலையாய்க் கூட வாழுங்கள்.  மடமைக்கு, மடையர்க்கு அடிபணியாதீர;! மடையராய் வாழாதீர்;! என்பதைக் கவிஞரின் ஹைகூக் கவிதைகள் முன்மொழிகின்றன.

மதுவிலக்குச் சிந்தனை கூறும் ஹைகூ

     மதுவிலக்கு என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் மதுவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்ட நடவடிக்கை இது குறித்து கவிஞர்

           “அடைவதாக வந்து ….
           இழக்கின்றனர்; நிம்மதி
           டாஸ்மாக்!”

                 “வெறும் வாசகமல்ல
                 முற்றிலும் உண்மை
                 குடி குடி கெடுக்கும்!”

           “பாதை தவறியவர்;கள்;
           போதை வாங்குமிடம்
           டாஸ்மாக்!”

     குடி குடியைக் கெடுக்கும் என்பது பழமொழி.  இன்று எல்லா மதுக்கடைகளிலும் எழுதப்பட்டிருக்கும் புதுமொழி - புதுமை விளம்பரம்! குடித்தவன் குடி வாழ்ந்ததுமில்லை வானளாவ வளர்;ந்ததுமில்லை. “மகாத்மா காந்தியடிகள்” அதனால் தான் மது விலக்;கைக் கொண்டு வரும் மகத்தான உண்மையைப் போதித்தார்;.  இதையே வள்ளுவம்.

           “உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

           எண்ணப் படவேண்டா தார்;.”                 (922)

     சான்றோர்; மதிக்காத கள்ளை உண்பவர்;களைச் சான்றோர; மதிக்க மாட்டார;கள் அதனால் ‘கள்ளை’ மதுவைக் குடிக்காதே என்கிறது குறள்.

உழவர்; நிலை கூறும் ஹைகூ

     உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என உழவையும் தொழிலையும் வணக்கம் கூறிப் பாடியவர; பாரதி! ஒரு சாண் வயிற்றினால் தான் இந்த உலகம் ஓடுகிறது.  உழைக்கிறது, அந்த ஒரு சான் வயிற்றுக்கும் உழவுத் தொழிலே உணவிடுகிறது ‘உண்டி முதற்றே உலகு’ என்பது உண்மை. இதைக் கவிஞர்;.

           “வேண்டாம் மழை
           வேண்டினான் விவசாயி
           அறுவடை நாள்.”

                 “எல்லா வழியிலும் போராடி
                 கிட்டவில்லை வெற்றி
                 விரக்தியில் விவசாயிகள்!”

           “துக்கம்
           துப்பாக்கிக் குண்டுகள் பரிசு
           உழவர்;களுக்கு!”

உழவு நாடு என்று இந்தியாவை உயர;த்திச் சொன்னாலும் மேலை நாடுகளின் மேலான நிலை இங்கு இன்னும் வரவில்லை.  அறிவியல் முறைகளில் அவர;கள் இருக்கும் நிலத்தில் ஏற்றமிகு வேளாண்மை புரிகிறார்;கள்.  இன்றைய சூழலில் உழவர்;களின் அவல நிலையை கவிஞரின் கவிதைகள் சிறப்பாக முன்வைக்-கின்றன.

அறம் கூறும் ஹைகூ

     மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே, முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர்;. ‘பிறவி தோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு.  இதனைக் குறித்து கவிஞர்

           “அடுத்தவருக்குத் தீங்கு
           நினைக்காதிருத்தல்
           அறம்!

           வன்முறை
           விரும்பாதிருத்தல்
           அறம்!

           மனிதநேயம்
           காட்டுதல்
           அறம்!”

     தமிழ் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் மனித குலத்தை இன்புறுத்தி அதன் வழியே அற ஒழுக்கத்தை உணர்;த்தும் வலிமை உடையதாக விளங்குகிறது.  மக்கள் ஆறறிவு உடையவர்கள்.  விலங்கு, பறவை முதலியன ஐந்தறிவு உடையன.  மக்களுக்குரிய ஆறாவது அறிவினால் உண்டாவது தான் அற ஒழுக்கம்.

தமிழ் கூறும் ஹைகூ

     தமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவற்றில் தமிழ் தான் மிகப் பழமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனைக் கவிஞர்; தன் ஹைகூவில்,

            “முதல்மொழி மட்டுமல்ல
           முதன்மை மொழி
           தமிழ்”

           “உலகம் முழுவதும்
           ஒலிக்கும் மொழி
           தமிழ்!”

           “மூலமொழி
           உலகமொழி ஆங்கிலத்திற்கும்
           தமிழ்மொழி!”

என்று குறிப்பிடுகின்றார்;.

தமிழுக்கு அமுதென்று பேர்;!
      அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
      எங்கள் உயிருக்கு நேர்;!

என்று பாவேந்தர; பாரதிதாசன் பாடியதும், தமிழ்மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று ஒப்புநோக்கத்தக்கது.  மேலும் தமிழின் சிறப்பை உணர;ந்த மேலைநாட்டறிஞர்; டாக்டர;. ஜி.யு.போப்;, தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர;ந்ததால் தமது கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்;.

மனிதநேயம் கூறும் ஹைகூ

     மனிதநேயமானது மனிதன் ஒருவரை ஒருவர; இனம், மொழி, நாடு இவற்றை அனைத்தையும் கடந்து நேசிக்க வேண்டும் என முன் வைக்கின்றது.

           “செடி வளரத்தோம்
           கொடி வளரத்தோம்
           மனிதநேயம் ?

                 “பிறருக்காக வாழ்பவர்கள்
                 இறந்த பின்னும்
                 வாழ்வார்கள்!”

           “மதங்களை விட
           உயர்வானது
           மனிதம்!”

போன்ற ஹைகூ கவிதைகளின் பிறருக்காக வாழ்தல் மற்றும் மதங்களை விட உயர்;வானது என்ற கருத்தைப் போதிக்கிறது.

     இதையே வள்ளுவரும் ‘அன்பின் வழியது உயர்;நிலை’ என்றும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளளாரும் பாடியுள்ளார்;.  மனித நேயத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் சமூகத்தில் சண்டை ஏற்பட வாய்ப்பில்லை என்பதை இன்றைய தலைமுறையும் இளைய தலைமுறையும். உணர;ந்து செயல்பட வேண்டும்.

காதல் கூறும் ஹைகூ

     காதலைப் பாடாத கவிஞர்; இல்லை.  காதலைப் பாடாதார்; கவிஞரே இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கவிஞர்;கள் எண்ணற்ற காதல் கவிதைகள் படைத்துள்ளனர்.

           “இனிது இனிது
           தமிழில் இனிது
           அவள் பெயர்;!”

                 “அன்றும் இன்றும்
                 என்றும் சிறக்கும்
                 காதல்!”

           “வானில் மிதக்கலாம்
           உலகை மறக்கலாம்
           காதல்!”

என்று காதலைக் குறித்துப் பாடியுள்ளார்;.

மூட நம்பிக்கை கூறும் ஹைகூ

     ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு (அ) பலன்களுக்கு எதிராக சரி என்றோ (அ) பலன் தரும் என்றோ நம்புவதை மூட நம்பிக்கை எனலாம்.  விஞ்ஞான அறிவுக்கு ஒத்து வராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன.  இதையே கவிஞரும்,

           “ஏமாற்றிப் பிழைப்பவர்;களின்
           ஏக வசனம்
           சோதிடம்!”

                 தன்னம்பிக்கையற்றவர்;களின்
                 மூடநம்பிக்கை
                 சோதிடம்!

           மூலதனம்
           பொய்யும் புரட்டும்
           சோதிடம்!”

     மூடநம்பிக்கைகளையும், பழங்கதைகளையும் தோண்டிப் புதைக்க வேண்டும்.  ஜாதகம் ஏதும் பாராமல் காதல் திருமணம் செய்து கொண்ட அனைவரும் வாழ்க்கையில் தோற்றதுமில்லை.  சடங்கும் சம்பிரதாயம் பார்;த்து திருமணம் செய்து கொண்ட அனைவரின் வாழ்க்கையும் வெற்றி பெற்றதுமில்லை.  மடமையை ஒழித்து பகுத்தறிவை பயன்படுத்துவதே சிறந்தது.

இயந்திர வாழ்வில் புதுக்கவிதைகளைக் கூட படிக்க நேரமற்றவர்;களுக்கு ஒரு நிகழ்வை மூன்றடிகளில் பாடுவது ஹைகூ.

ஹைகூ கற்பனையை ஏற்காது. ஹைகூ உவமை, உருவகங்-களைப் பயன்படுத்தாது.  ஹைகூ உணர்;ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.

ஹைகூ தன்மைப் பாங்கினைத் தவிர்;க்கும் எளிமையாகக் கூறுவது, சின்ன உயிர;களையும் சிறப்பித்துப் பாடுவது.  இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்;வுகளோடு இணைத்துப் பாடுவது.  ஆழ்மன உணர்;வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது. பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது ஹைகூ கவிதைகள்.

கருத்துகள்