படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! நாடறிந்தோர் வாழ்வில் ... (கவிதைத் தொகுதி) நூல் ஆசிரியர் : கவி வேந்தர் கா. வேழவேந்தன் புத்தக மதிப்புரை : கு.இராமமூர்த்தி, மதுரை வாசகர் வட்டம்
படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !
நாடறிந்தோர் வாழ்வில் ...(கவிதைத் தொகுதி)
நூல் ஆசிரியர் : கவி வேந்தர் கா. வேழவேந்தன்
நூல் ஆசிரியர் : கவி வேந்தர் கா. வேழவேந்தன்
புத்தக மதிப்புரை : கு.இராமமூர்த்தி, மதுரை வாசகர் வட்டம் .
சீதைப் பதிப்பகம், சென்னை.பக்கங்கள் : 141, விலை : ரூ.80.
******
நூலாசிரியரைப் பற்றி :
- பாரதிதாசன் பரம்பரையில் வாழையடி வாழையென வந்த கவிஞர்.
- பலாச் சுளைகளை எடுத்து கவிதைத் தேனில் தோய்த்து விருந்து பரிமாறி இருக்கிறார் .( கவிக்கோ )
- பயனுள்ள கருத்துப் பெட்டகம் (தெ. சமரசம்)
- பாரதி, சுரதா, கண்ணதாசன், பாரதிதாசன் சாயல்கள் இவரிடம் உள்ளது (தெ. சமரசம்)
- நிறைய கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.
- நம்மை வழிநடத்தும் நல்ல கருத்துக்களை பதிவு செய்கிறது.
- வரலாற்றுப் பெட்டகம்.
- தமிழ்ப் பகையின் தலையனுக்கும் கூரிய வாள்.
- 50 வரலாற்றறிஞர்களின் வாழ்வில் நடந்தவை.
- விருத்தப் பாவால் ஆனது.
சாக்ரடீஸ் :”
- சிறையில் – விடிந்தால் - உங்கள் உயிர் போகிற பின்னிரவும் படிப்பா?
- நன்றுள்ள இந்நூலை முடிப்பேன், நாளை
நற்பனுவல் பிழைச் சுவைக்க முடியாதென்னால்.
தாய் சிறப்பு :
- சப்பான் கிராமம் – உயிர் பிரியா முதியோர் தம்மை, தோளில் ஏந்தி மலையுச்சிதனில் சேர்ந்து திரும்பி வரவும்.
- அன்னை கரத்தை நீட்டி, மரத்தழையை பறித்துப் போட்டாள். விளக்கம் கேட்ட மகளுக்கு, நீயும் வழி தவறித் திண்டாடக் கூடாதென்றே இலை, தழையை போட்டேன் என்றாள்.
சீன அறிஞர் “யுவான் சுவாங்” :
- படகோட்டி, பயணத்தைத் தொடர வேண்டின், பன்னூல்கள் மூட்டையை நீர் எறிவீர், என்றான். “எடையில் தான் தடை என்றால், நானும் ஆற்றில் இறங்கி, உடன் நீந்தி வந்தே கரை சேர்கின்றேன். நெடும் உழைப்பால் நான் சேர்த்த நூற்செல்வத்தை நேயமுடன், கரை சேர்ப்பீர்” என்றார்.
காந்தியைக் கண்டு கதிகலங்கிய சர்ச்சில் :
- தடியூன்றும் காந்திக்கேன் அஞ்சுகின்றீர்? நெடுங்கூர்வாள் ஏந்தி காந்தி வந்தால், நேர் நின்றே துப்பாக்கி கொண்டழிப்பேன். பீரங்கி கொண்டே எதிர்த்திருந்தால், கொன்றிருப்பேன் அணுகுண்டால், அகிம்சை என்னும் ஆயுதத்தை எதிர்கொள்ள நம் கையில் ஏதுமில்லை!
பெரியார் :
- நான் மதிக்க்கும் ஈடில்லா நூல் குறளே என்றார. ஒப்பாத இறை வாழ்க்கை ஏற்கின்றீரா? திருக்குறளை பல சரக்குக்களை வைத்துள்ளார் ; தேவைகலை வாங்குகின்றேன்.
பாவேந்தர் :
- நாங்கே தூங்குவதற்கே ஏங்கிடுவோர் செல்க; நாட்டின் தூக்கத்தை கலைப்பதற்கே பேசுகின்றேன். மடமைப் பேயாட்டத்தைத் தகர்க்கும் வரை என் உரை தொடரும் என உரைத்தார்.
ஓமந்தூரார் :
- குற்றால குளியல் – பலாப்பழம் வெட்டி வந்த ஓட்டுநர் – திரும்ப கொண்டு, கொடுத்து விட்டை சீட்டு வாங்கி வா.
பெர்னாட் ஷா :
- தேர்தலில் போட்டியிட மறுப்பு. ஈடில்லா என் பேனாக் கருத்தே, மண் மேல் எவர் நாவின் கருத்தை விட நிலைக்கும்.
முத்துலட்சுமி ரெட்டி :
- மரபுகளை மாற்றாதீர் ; கடவுளர்க்கு மனம் உவந்த சேவை என்றார் சத்தியமூர்த்தி ; அருந்தொண்டை இதுவரையில் எங்கள் பெண்டிர் ஆண்டாண்டாய் செய்து விட்டார் ; இனிமேல் அந்தத் திருப்பணியை அன்னாரின் வீட்டு பெண்கள் சிறப்பாகச் செய்யட்டும்!
காந்தியார் :
- குதிரைகளோ! உலகமெங்கும் பலவண்ண எழில் நிறத்தில் அழகாய் தோன்றும். சீரில்லா கழுதைகளோ, கோளமெங்கும் தீச்சாம்பல் ஒரே நிறத்தில் மங்கிக் காண்கிறது. பாரபட்சம் படைப்பிடத்தில், இப்புதிர்க்குப் பதிலறிய வேண்டும் நீர், என்றார் காந்தி.
உருவத்தால் தாழ்வா? லால்பகதூர் சாஸ்திரி :
- எட்டி எட்டி தலை நிமிர்த்தி பேசுவதற்கே இருக்காதா, மிக வெட்கம்? – எனக் கேட்டார் ஒருவர். நெருங்கி வந்து பேசுபவர் அன்றோ தாழ்ந்து, நெளிந்து தலைகுனிகின்றார், எனக்கேன் வெட்கம்?
லெனின் :
- கால்கள், மண் தரையைத் தொடாததனைக் கேலி செய்தே ஒரு தோழர் சிரித்திட்டார். உள்ளங்கால் பூமியினைத் தொடவே வேண்டாம். இருக்கின்ற மூளைவளத் திறத்தால், என்றன் எண்ணங்கள் விண்முகட்டை தொட்டால் போதும், என்றார் லெனின்.
- மகிழம் பூ சிறியதே, ஆனால், தெவிட்டாத நறுமணத்தால், நெஞ்சை அள்ளும்.
- குயில் உருவத்தில் சிறியது, அதன் கானம் – கற்கண்டு, உள்ளத்தால் உயர் பண்பால், மனிதர்களை அளப்போம்.
சிங்கார வேலர் :
- தொழிலாளர் தம் தனிப்பெரு நாள், “மே தினத்தை முதலில் தமிழ்மண்ணில் கொண்டாடி சரித்திரம் கண்டார். சர். சி.பி. – என்னையா சிங்காரம்? தூண்டில் தூக்கும் இக்கையா இத்தனை நூல் தாங்கும்? கேட்ட, தன்மான வேலர், “இது தர்ப்பைப் புல்லைத் தாங்குகின்ற கையை விட வலியது” என்றார்.
இலக்குவனார் :
- இந்தி மொழி சட்டத்திற்காக சிறை சென்ற இலக்குவனார், 80 நாள் சிறைவாசம் முடிந்தபின், தாயைக் காண்பதற்குச் சிறை விடுப்பு விண்ணப்பம் செய்திட்டார். ஆட்சியாளர், வெம்போரில் விடுபடேன் என்றால், உம்மை திண்ணமுடன் விடுதலையே செய்வோம். நான் ஒப்பிப் பணியேன் என்றார். கண்ணியரோ, பரோல் பெற்று வெளியே வந்து கையொப்பம் தினமிட்டார் கொலைகாரன் போல.
பாரதியார் :
- என்றைக்கும் வறுமைத் தீ வாட்டும் ரிக்சா ஏழைமகன், தன் துயரை விரித்தான், கேட்டே அன்று திங்கள் சம்பளமாய்ப் பெற்று வந்த 50 ரூபாய் உறையை, அவன் கையில் வைத்தார். பின், குடும்ப நண்பர் இராமசாமி, தொழிலாளிக்குரிய காசை கணக்கிட்டு தந்தபின், உறையப் பெற்று, செல்லம்மாளிடம் அளித்தார்.
அண்ணா :
- மண்ணெண்ணெய் நெடியடித்த உணவை, நீங்கள் மனம் ஒப்பி, எப்படித்தான் உண்டீர்? அண்ணா, பாசமுடன் அளித்த சோற்றை, உண்ணாமல் நான் எழுந்தால், தோழர் உள்ளம் உடையாதா? எனச் சொன்னார்.
- அண்ணாவின் வெற்றியை, இது “வாய்”க்கும், “மை”க்கும் இங்கே கிடைத்த வெற்றி என்றார்.
- திருடர் சூழ்ந்து, காட்டுங்கள் சட்டைப் பை என்பார், “செல்லாக் காசில்லா பஞ்சைகட்குக் கார் ஏன்? என்றே போட்டு தன்கு சாந்திடுவல்.
- மிளகுக்கே உளபெருமை தோற்றத்தாலா? மேன்மைமிகு பயனால் தான். எளிமை போற்றினார். சோபா, நாற்காலி வேண்டாமென்றார், பக்தவச்சலம் குடும்பத்தாருக்கு உதவி செய்தார்.
சர். சி.வி. ராமன் :- டர்பன் பற்றியது.
- மற்றவர்கள் புகழ்ந்துரைக்கும் சொற்கள் கேட்டால், மயக்கம் வரும் ; மிதப்பு வரும், தவிர்க்க! வெற்றுரையால், தனக்கனத்தே என்றன் மண்டை, வீங்கி விடக் கூடாதே.
திரு.வி.க. :
- தமிழே தித்திக்கும் பொங்கல். பொங்கல் நாளில், திரு.வி.க.வை மு.வ. சந்திக்க வந்தபோது, சீர் பொங்கள் கொண்டாட்டம், உமதில்லத்தில் கிடையாதா? என வினவிய போது, மு.வ., “தங்கள் பேச்சே நான் விரும்பும், கரும்புப் பொங்கல் என்றார்.
அலெக்சாண்டர் :
- 16 வயதிற்குள்ளே, போர்படைத் தளபதியாய் பொறுப்பு. மறப்போரில், எதிரிகளின் வாள், வேல் பாய்ந்த மாப்பதக்க விழுப்புண் ஏன்? கிரேக்க அன்னைச் சிறப்போங்க வேண்டாமோ? என்றான்.
திருக்குறள் மாட்சி (சி.யூ. போப்)
- திருமறை நம் விவிலியத்தைப் போற்றுகின்றேன். அமிழ்தனைய திருக்குறளைப் படித்த போழ்தில் அறிவாழக் கடலில் மூழ்கிப் போனேன் என்றார்.
திருவாசகம் (போப்) :
- எழில் திருவாசகம், எழுதும் போது என் இரு விழிகள் பொழியும் ஆனந்தக் கண்ணீர் எழுத்துக்களை அழித்தால் நான் என்ன செய்வேன் – என, திருவாசகம் பற்றிய பெருமையை பேசுகிறது.
வள்லலார் :
- அப்பா! நீயும் வைத்திருக்கும் என் நகைகள் சொக்கத் தங்கம், விலை குறைத்து விற்காதே, அதுவுமின்றி, இரத்தினம் நீ ஒரே கடுக்கண் விற்கப் போனால், எல்லோர்க்கும் ஐயம் வரும் ; அதனால், நானும் மொத்தமிங்கே இணையாகத் தந்தேன் என்றார். (கள்ளனுக்கும் உதவிடார்)
விஸ்வேஸ்வரய்யா (100 வருடங்கள் தாண்டி வாழ்ந்தவர்)
- சிறந்த அறிஞர் – என்னையும் தான் கொண்டு செல்ல எமனும் என்றன் இல்லத்துள் நுழைகின்றான ; அந்த நேரம் என் பணியில் மும்முரமாய இருப்பேன் ; கண்டே, இன்னொரு நாள் வந்திடுவோன் என்றே அந்தத் தென்புலத்தான் போய் விடுவான் ; இதுபோல் அன்னோன் திரும்ப வரும்பொழுதெல்லாம் நிகழும் ; சொன்னால், என் உழைப்பே என்றும் உயிரை நின்று காக்கும். இது தானே பேருழைப்பின் மாட்சி!
சீகன்பால் :
- மதம் பரப்ப வந்தவரோ, மாத்தமிழ் பரப்புவதில் இன்பம் கண்டார். விதவிதமாக நூல் எழுதினார். இலண்டன் மண்ணில் இவரைப் பாராட்ட இலத்தீன் மொழி தான் பொருத்தம் என்றனர். ஆனால், பாரினிலே மிக இனிய மொழி, பைந்தமிழ் தான் என உரைத்தார்.
எடிசன் :
- இவ்வுலகம் மேன்மை பெற, மின்சாரத்தை, வானொலியை, திரைப்படத்தை கண்டுபிடித்தார். அரிய கண்டுபிடிப்புகளால் திகைக்க வைத்த அவருடைய பிறந்த நாளுக்கு, மின் துண்டிப்பால் நெடிய இருள், கவ்வச் செய்து, அவருடைய நூற்றாண்டு பிறந்த நாளை அமெரிக்கா கொண்டாடியது.
ஐன்ஸ்டீன் :
- மறதி நோயால் அவதிப்பட்டவர். தொடர்வண்டி பயண ஆய்வாளர் இவரிடம் பயணச் சீட்டு கேட்க, தன் பெட்டியெல்லாம் தேடிப் பார்த்து அது கிடைக்கவில்லை. சரி வேண்டாம். தாங்கள் யார் அறிவேன், என்றார். அம்மேதை, இறங்கும் ஊர் காண, என் சீட்டு தேவை எனக் கூற, ஆய்வாளர், ஐன்ஸ்டீன் இல்லத்தை அணுக்கமுடன் தொடர்பு கொண்டு, அவர் இறங்கும் ஊர் சொன்னார். மதிவளத்தால் பெருமை பெற்ற ஐன்ஸ்டீன் கூட மறதி என்னும் கொடும் நோயால் சிறுமை உற்றார்.
நேரு :
- நூல்களின் காதலன் – நேரில்லா சீர் நூல்கள் ஐம்பதும் சுவைப்பதற்கே நேரமெங்கே இருக்கிறது?
பாவாணர் :
- உலகத்தின் முதல் மாந்தன் தமிழன், உலகத்தின் முதல் மொழி தமிழ். அடித்துச் சொன்னார். சாரி, மன்னியுங்கள் ; என்ற சொல்லுக்கு பொறுத்தருள்க, என்று விளக்கம் கூறுகிறார்.
அன்னை தெரசா :
- அல்பேனியா நாட்டில் பிறந்த தெரசா, கொல்கத்தா வந்து, நலிந்தோர்க்கும், தொழுநோயால் உழல்வோருக்கும், விழியற்-றோருக்கும் உதவி செய்தார்.
- “நோபல் பரிசு” பெற்ற அன்னையை, ஒரு பத்திரிகையாளர், தாங்கள் சொர்க்கம் புகுவீர்கள் என்றார். அதற்கு, நரகத்தில் வேதனையில் உழல்வோர்க்கு, நரகம் சென்று உதவுவேன் என்றார்.
காமராசர் :
- விருதுநகர் அளித்த பெருமை. வாகனத்தில், மின் சங்கோசை நிறுத்தச் சொன்னார். நான் இன்னும் சாகவில்லை என்றார். தொண்டனின் மகள் திருமணத்தில், வர முடியாது என்று கூறி, எளிமையாக, எதிர்பாராத விதமாக திருமணத்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சிப்படுத்தினார்.
ஜீவா :
- இயக்கத்தின் வளர்ச்சிக்கு, மக்கள் தந்த காசில் கை வைத்தால் துரோகம்.
கலைவாணர் :
- இல்லையென்றே சொல்லாமல், யார் வந்தாலும், எடுத்தளிக்கும் ஈர்நெஞ்சர். மருத்துவமனையில் அவர் இருந்தபோது, துணை நடிகர், அவரிடம் வறுமையால் வாடும் தனக்கு உதவ வேண்டினார். காசில்லாத கலைவாணர், அருகில் இந்த வெள்ளிக்கூசாவை தந்து, அவர் வறுமை போக்கச் சொன்னார்.
கண்ணதாசன் :
- மதுரையில் கல்லூரி விழாவில் – கவியரசர் மாணவரின் கவிதை பாட, கையொலியோ அதிர்ந்தது. அரசர் பாட்டை மாணவன் படித்தபோது, அயர்வுடன் அவை இருக்க, கவிஞர் நான் படித்த பாடலைச் சுவைத்தீரே, அப்பாடல் இளைஞர் பாடல். தொய்வோடு கேட்டீரே, அது என் பாடல். சரக்கின் மிடுக்கைப் பாருங்கள். கடைச் செட்டியாரிடம் மினுமினுப்பைப் பார்க்காதீர்கள் என்றார்.
சுரதா :
- நூல் வேட்கை – உவமைகளே இல்லாத கவிதையெல்லாம் உப்பில்லாப் பண்டம் சுகவீனமாக இருந்தபோதும், பக்கத்தில் பெரியதொரு கோபுரம் போல் நூல்கள், படிப்பதற்கு தூங்குகின்ற தன் மீது, நூல்கள் சாய்ந்து விழும் போது, எழுந்து, அத்தனையும் படித்து முடிப்பேன்.
ஹோசி மின் :
- விந்தை வரலாறு – நோஞ்சான் சிறுவன் – காசின்றி, உணவின்றி அவனே சாவான். அவன் தான், தாய் மண்னை மீட்க, தொடர் போர்கள் தொடுத்திட்டான். வெற்றி கண்டான்.
- எந்த ஒரு மனிதனையும் உருவு கண்டே எள்ளாமை வேண்டுமென்றார் – குறளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக